உதயநிதியை மிக கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

- Muthu Kumar
- 20 Feb, 2025
கரூர் மாவட்டத்தில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், "உதயநிதி சொல்கிறார். மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால், முதலில் Go Back மோடி என்று சொன்னோம். ஆனால், இப்போது வந்தால், கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று கூறியிருக்கிறார்.
உதயநிதிக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீ சரியான ஆளா இருந்தா உன் வாயில இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லி பாரு.இல்ல இல்ல எங்க அப்பா முதலமைச்சர். என் தாத்தா 5 முறை முதலமைச்சர். நீ சொல்லிப் பாரு பார்க்கலாம். 2 நாட்களுக்கு முன்பு நீ என்ன சொன்ன சென்னையில. கெட் அவுட் மோடின்னு சொல்வாராம். வெளிய போடா மோடின்னு சொல்வாராம். உன் வீட்டுக்கு வெளியில வந்து பால்டாயில் பாபுனு போஸ்டர் ஒட்டிட்டு வருவேன். நீ சொல்லுற அதே பாணியில் நானும் பேசுவேண்.
உனக்கு ஒரு உலகத்தலைவரை மதிக்கத் தெரியல. நீ ஒரு கத்துக்குட்டி. காலையில 11.30 மணிக்குத்தான் உன் மேல வெயிலே படும். நீ சூரியனை காலைல நேரத்துல பார்த்ததே இல்ல. சூரியனை பார்த்து துப்பி அந்த எச்சில் உன் மேல விழும். அப்படிப்பட்ட ஆள் நீ. 3.30 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து யோக பண்ணிட்டு, 5 மணிக்கு ஃபைலை திறந்து இந்த நாட்டை ஆட்சி பண்றவர் பிரதமர் மோடி.
11.30 மணிக்கு எழுந்திருக்கும் உனக்கே இவ்வளவு திமிர் இருந்தா சாதாரண நடுத்தர மக்கள் உழைத்து, நாட்டை உருவாக்கக் கூடிய மக்களுக்கு எவ்வளவு திமிர் இருக்கும்.கரூரில் சாராய அமைச்சர் ஒருவர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இவர்கள் எந்த அளவுக்கு கேவலமான பேர்வழி என்றால், சாராய அமைச்சரின் சொந்த தம்பி ஒரு வருஷமாக காவல்துறையால் தேடப்படக்கூடிய குற்றவாளி.
இந்த கொடுமைய எங்கையாச்சும் பார்த்துருக்கீங்களா? இந்தியாவுல எங்கையாவது இந்த அநியாயத்தை பார்த்துருக்கீங்களா? ஒரு சாராய அமைச்சரின் சொந்த தம்பி வேற எங்கையும் இல்ல. ஈசிஆர் ரோட்ல தான் இருக்காரு. தமிழ்நாடு காவல்துறை வந்தால் பிடிச்சிட்டு போகலாம். தேர்தல் வருது. கொஞ்ச நாளைக்கு அவர் வெளியே இருக்கட்டும். அப்பறம் பாத்துக்கலாம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். இதே ஊரில் 20 வயசு வரை நான் கழிப்பறையை பார்த்தது இல்லை. பள்ளி செல்லும்போது, காலையில் ஆட்டுப்புளுக்கையை அள்ளிக் கொட்டிட்டு, மாட்டு சாணத்தை அள்ளி வீசிவிட்டு பேருந்தில் ஏறி பள்ளிப்படிப்பை படித்தவன் நான். பந்தா காட்டுற வேலையெல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க. மோடி என் கையை பிடித்து குலுக்குறார் என்றால், என் கல்விக்காக மட்டும்தான். உங்களுடைய பிள்ளைக்கும் அது கிடைக்க வேண்டும். வேற ஒரு வெங்காயமும் கிடையாது" என்று காட்டமாக பேசியிருக்கிறார் அண்ணாமலை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *