80 மீட்டர் தூரத்தில் ஒரு பொருள் அது விஜயலட்சுமியாக இருக்கலாம் கே 9 பிரிவு மற்றும் சார் படை கணிப்பு!
- Shan Siva
- 29 Aug, 2024
கோலாலம்பூர், ஆகஸ்ட் 29: கோலாலம்பூர், ஜலான் மஸ்ஜுட் இந்தியாவில் நில அமிழ்வில் மாயமான விஜயலட்சுமி விழுந்த இடத்திலிருந்து. தோராயமாக 80மீ தொலைவில் அமைந்துள்ள சிங்க்ஹோலுக்கும் இரண்டாவது கழிவுநீர் அறைக்கும் இடையே ஒரு பொருள் கண்டறியப்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
அந்த இடத்தில் K9 பிரிவைச் சேர்ந்த டென்டி மற்றும் ஃபிரான்கி நாய்களின் உதவியுடன் இது கண்டறியப்பட்டதாக மீட்பு நடவடிக்கைகளின் துணை இயக்குநர் அஹ்மத் இஸ்ராம் ஒஸ்மான் கூறினார்.
தங்கள் K9 குழுவின் மோப்பம் அந்தப் பகுதியை நோக்கி வலுவாக சுட்டிக்காட்டுகிறது என்றும், அதுவே இலக்காக இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கேமராக்களும் ஒரு தடையை அந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றன.
இது பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது வேறு ஏதேனும் பொருள் அங்கு சிக்கியிருக்கலாம் என்று அறிவுறுத்துகிறது.
எனவே தாங்கள் அந்த பகுதியைத் தேட விரும்புகிறோம், என்று அவர் சம்பவ இடத்தில் கூறினார்.
குழிக்குள் டைவர்ஸ் நகர்வதற்கு வசதியாக, கழிவுநீரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இஸ்ராம் கூறினார்.
இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களை மேற்பார்வையிடும் 75 பணியாளர்களின் ஆதரவுடன் எட்டு டைவர்ஸை உள்ளடக்கிய டைவிங் நடவடிக்கை அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது.
இந்த நடவடிக்கையை அதிகாலை 2 மணிக்கு நடத்துவதற்குக் காரணம், சாக்கடை நீர் மட்டம் 1.5 மீட்டருக்குக் கீழே இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர்கூறினார்.
வழக்கமான அளவான 1.5 மீட்டருடன் ஒப்பிடும்போது, தற்போது மூன்று மடங்கு வேகத்தில் உள்ளது, இது வலுவான நீர் ஓட்டம், இது டைவர்ஸுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று தெதிவித்தார்.
கழிவுநீர் அறையின் சுவருக்கும், கழிவுநீர் குழாய்க்கும் இடையில் ஒரு சிறிய இடைவெளியை ஆய்வு செய்யப் போவதாகவும் அவர் கூறினார்.
இது தவிர தேடல் மற்றும் மீட்பு (SAR) குழு அனைத்து கழிவுநீர் அறைகளையும் ஆய்வு செய்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள், பல வழிகளில் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி தொடரும் என்றும் அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *