உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதும்! கோவிஷில்டு தடுப்பூசி பயம் தேவையில்லை!

top-news
FREE WEBSITE AD

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் கோடிக்கணக்காருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனிடையே, இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு உடலின் பல பாகங்களில் ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் உறைதல், ரத்த தட்டுகள் குறைந்து போதல் உள்ளிட்ட பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனமே பிரிட்டன் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவித்தது.

ஏற்கனவே இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக மாரடைப்பால் இளம் வயதினர் அதிக அளவில் உயிரிழந்து வரும் சூழலில், கோவிஷீல்டு ஊசி பற்றிய இந்த  வாக்குமூலம், அந்த ஊசி போட்டவர்கள் அனைவரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. தங்களுக்கு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும், கோவிஷீல்டு தடுப்பூசியால் தான் இது ஏற்பட்டுள்ளது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிடுகின்றனர். மேலும், தங்கள் மருத்துவர்களிடம் இதுதொடர்பாக பலரும் கவலையுடன் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவிஷீல்டு விவகாரம் தொடர்பாக தமிழ்நட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் நிருபர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த மா. சுப்பிரமணியன், "எந்த தடுப்பூசியாக இருந்தாலும், அவரவர் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை பொறுத்துதான் அதன் விளைவுகள் இருக்கும். ரத்தம் உறைதல் பிரச்சினை வரலாம் என தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இதுவரைக்கும் அப்படிப்பட்ட தரவுகள் எதுவும் பதிவாகவில்லை.

எனவே கோவிஷீல்டு போட்டவர்கள் பயத்துடனேயே வாழ வேண்டிய அவசியம் இல்லை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக் கொண்டாலே போதும். சரியான உணவு, காலையில் உடற்பயிற்சி, நல்ல தூக்கம் ஆகிய பழக்கங்களை பின்பற்ற வேண்டும்" என மா. சுப்பிரமணியன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]