வெளிநாட்டவர் அடிக்கடி வரும் இடங்களில் இனி தீவிர சோதனை!

- Shan Siva
- 17 May, 2025
புத்ராஜெயா, மே 16: வெளிநாட்டவர்கள் அடிக்கடி வரும் இடங்களில் சோதனை நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரச மலேசியா போலீஸ் படை, மலேசிய தன்னார்வத் துறை, தேசிய பதிவுத் துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் (பிபிடி) இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
மே 13 ஆம் தேதி நிலவரப்படி, குடிநுழைவுத்துறை 5,001 நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், 34,287 சட்டவிரோதக் குடியேறிகள் மற்றும் 669 முதலாளிகளை பல்வேறு குடிநுழைவு குற்றங்களுக்காக தடுத்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
2025 ‘அமலாக்க ஆண்டாக’ அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் அதிக அளவில் உள்ள பகுதிகளில் கவனம் செலுத்தி, ஒருங்கிணைந்த மற்றும் பெரிய அளவிலான அமலாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு குடிநுழைவு துறை தலைமை இயக்குநருக்குத் தாம் அறிவுறுத்தியுள்ளதாக குடிநுழைவுத் துறையின் சிறந்த சேவை விருதை வழங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.
சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்தும் அல்லது ஆவணமற்றவர்க்ளுக்கு அடைக்கலம் அளிக்கும் அனைத்து முதலாளிகளும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க முடியாது என்றும் சைபுடின் நசாத்தியோன் எச்சரித்தார்!
Kerajaan mempertingkat operasi penguatkuasaan di kawasan tumpuan warga asing. Sehingga 13 Mei, lebih 34,000 pendatang tanpa izin ditahan. Majikan yang menggaji atau melindungi mereka tanpa dokumen sah tidak akan terlepas daripada tindakan undang-undang, tegas Menteri Dalam Negeri.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *