தேசிய பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் ஆசிரியர்களை இணைக்க வேண்டும்! - NUTP

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 26: தற்போதைய பாடத்திட்டம் 2027ல் முடிவடையும் நிலையில், தேசிய பாடத்திட்டத்தை உருவாக்கும் குழுவில் ஆசிரியர்களை இணைக்குமாறு கல்வி அமைச்சை தேசிய ஆசிரியர் தொழில் சங்கமான NUTP வலியுறுத்தியுள்ளது.

மலேசியாவின் பாடத்திட்டத் தேவைகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்குத் தேவையான கட்டமைப்பைத் தீர்மானிப்பது அமைச்சின் பொறுப்பாகும் என்று NUTP பொதுச்செயலாளர் Fouzi Singon தெரிவித்தார்.

பாடத்திட்ட வரைவுக் குழு, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும்,  குறிப்பாக வகுப்பறைகளில் கற்பிப்பவர்கள்,கல்வியில் அதிக அனுபவம் உள்ளவர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய பாடத்திட்டம் சரியானதா இல்லையா? என்பது மாணவர்களை கல்வித் தேவைகளுக்கும் எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை தேவைகளுக்கும் தயார்படுத்துமா என்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *