NURUL AZIZAH என் மகள் அல்ல! பி.கே.ஆரின் புதல்வி! – அன்வார்

top-news

மே 24,

அப்பா தலைவர் மகள் துணைத்தலைவர் என பி.கே.ஆர் கட்சியின் தேர்தல் முடிவுகளை விமர்சிப்பவர்களுக்குப் பி.கே.ஆரின் தலைவராக நான் ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன், நூருல் இசா என் மகள் இல்லை. அவர் பி.கே.ஆரின் புதல்வி என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியின் வரலாறு தெரியாதவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் அனைவருக்கும் பொதுவான ஒருவராக அவர்களும் நான் விளக்கமளிக்க வேண்டும் என அன்வார் தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியைத் தோற்றுவித்ததும் என்னை பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகச் சிறையில் அடைத்தனர். அப்போது கட்சியைக் கட்டி எழுப்பும் முக்கிய பொறுப்பை என் மனைவி Datuk Seri Dr Wan Azizah Wan Ismail ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதற்கு காரணம் நான். ஆமாம். அன்றைய காலத்தில் நான் துரோகத்தால் வீழ்த்தப்பட்டிருந்தேன். அப்போது என் பாதியாக இருந்த Datuk Seri Dr Wan Azizah Wan Ismail-ஐ மட்டுமே என்னால் முழுமையாக நம்பியிருக்க முடிந்தது. ஆனால் இப்போது பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராக இப்போது வெற்றிப் பெற்று அமர்ந்திருக்கும் Nurul Izzah தானாகக் கட்சியில் வளர்ந்தார். 

கட்சித் தொடங்கிய போது WAN AZIZAH தலைமையில் பி.கே.ஆர் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக Nurul Izzah தனது பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை நிறுத்தி விட்டு கட்சியில் உறுப்பினராக இணைந்து எந்தவொரு பதவியும் இல்லாமல் கட்சியை வலுப்படுத்தினார். உண்மையில் Nurul Izzah பல்கலைக்கழகப் பட்டப்படிப்பை நிறுத்தியதும் ஒரு தந்தையாக நான் வருத்தப்பட்டேன். ஆனால் கட்சியின் தோற்றுநராக ஒரு புதிய தெம்பு கிடைத்தது. இப்போதும் சொல்கிறேன், Nurul Izzah துணைத் தலைவராக வர வேண்டும் என்பதற்காக ஒரு சராசரி அப்பாவாகவோ, பி.கே.ஆர் கட்சியின் தலைவராகவோ நான் எதுவுமே செய்யவில்லை. ஆனால் Nurul Izzah தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது முழுக்க முழுக்க Nurul Izzahவின் வெற்றி. இதில் ஒரு துளி கூட என்னுடைய பங்களிப்பு இல்லை என அன்வார் வெளிப்படையாக அறிவித்தார்.

Datuk Seri Anwar Ibrahim menegaskan bahawa Nurul Izzah bukan sekadar anaknya, tetapi milik perjuangan PKR. Beliau menolak dakwaan nepotisme dan menyatakan Nurul Izzah menang jawatan Naib Presiden atas usaha dan sokongan ahli parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *