வெளிநாட்டவர்களுக்கு உதவியதாக நம்பப்படும்.4 அதிகாரிகள் மீது விசாரணை!

- Muthu Kumar
- 22 May, 2025
கோலாலம்பூர், மே 22-
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் மாதம் வரையில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் செல்லுபடியாகும் நடைமுறையின்றி. அந்நிய நாட்டினர் குடிநுழைவு சோதனைகளில் இருந்து விடுபட உதவிய குற்றத்திற்காக, மலேசிய எல்லை கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம், ஏ.கே.பி.எஸ்ஸின் நான்கு அதிகாரிகள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பந்தப்பட்ட அந்த அதிகாரிகள், சட்டப்பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், சோதனை முகப்பின் வழியாக சில நபர்களை நாட்டிற்குள் நுழைய விட்டதாக சந்தேகிக்கப்படுவதாக, ஏ.கே.பி.எஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இவ்விவகாரத்தைத் தீவிரமாக பார்ப்பதோடு, நாட்டின் எல்லை பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு செயலில் ஈடுபடும் அதிகாரிகளையும் தனிநபர்களையும் தங்கள் தரப்பு சமரசம் காணாது என்றும் அதில் குறிப்பிட்டிருந்தது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதுச் சட்ட விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏ.கே.பி.எஸ் கூறியது.
இதனிடையே, அதே காலகட்டத்தில் நாட்டை விட்டு வெளியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் வியாட்நாம். கெம்போஜா, இந்தியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 25 அந்நிய நாட்டினரையும் தடுத்து வைத்திருப்பதாக ஏ.கே.பி.எஸ் தெரிவித்துள்ளது.
Empat pegawai AKBS disiasat kerana disyaki membantu warga asing melepasi pemeriksaan imigresen tanpa prosedur sah di KLIA. AKBS menegaskan tindakan disiplin akan diambil. Seramai 25 warga asing turut ditahan kerana cuba keluar negara secara tidak sah
.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *