நஜீப் மட்டும் ஊழல்வாதியல்! பட்டியல் இன்னும் இருக்கு! – அன்வார்!

- Sangeetha K Loganathan
- 18 May, 2025
மே 18,
ஊழல் என்றாலே அதில் முன்னாள் பிரதமர்கள் மட்டும் தான் சம்மந்தப்பட்டுள்ளதாகக் கருத முடியாது என்றும் அரசாங்கத்தின் தலைமை பொறுப்புகளை வகித்த பலரும் ஊழலில் ஈடுப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Anwar Ibrahim ஒரு பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார் முக்கியமான ஊழல் என்றால் 1MDB ஊழல். 1MDB ஊழலில் முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razak மட்டுமே சம்மந்தப்பட்டிருப்பதாக அனைவரும் நினைத்து வருகின்றனர். ஆனால் பின்னனியில் பலரும் தொடர்பில் உள்ளனர் என Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
1MDB ஊழல் பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. அதனால் 1MDB நிறுவனத்தின் தலைமையில் இருந்த அப்போதைய பிரதமர் Datuk Seri Najib Razak மீது ஊழல்வாதி எனும்படியானப் போர்வை போர்த்தப்பட்டது. ஆனால் உண்மையில் தனிநபரால் பல பில்லியன் ஊழலை நிகழ்த்தியிருக்க முடியும் என்பதைத் தாம் நம்பவில்லை என்றும் அதன் பட்டியல் நிச்சயம் நீண்டு இருக்கும் என்றும் அன்வார் தெரிவித்தார். இந்த ஊழல் வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் என் பங்களிப்பு சிறிதளவு மட்டுமே. இதில் பல தலைவர்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். 1MDB நிறுவனத்தின் மீதான பல பில்லியன் டாலர் ஊழல் வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். அப்படி விசாரிக்கப்பட்டால் பல நூறு பக்கங்கள் கொண்ட 1MDB நிறுவனத்தின் ஊழல் குற்றப்பத்திரிக்கையில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு தலைவர் தொடர்புடையவராக இருப்பார் என Datuk Seri Anwar Ibrahim வெளிப்படையாகத் தெரிவித்தார்.
Datuk Seri Anwar Ibrahim menegaskan bahawa isu 1MDB tidak melibatkan Najib Razak seorang sahaja. Beliau percaya ramai pemimpin terlibat dalam skandal tersebut dan menyeru siasatan penuh dilakukan bagi membongkar penglibatan individu lain dalam kes rasuah berbilion dolar itu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *