அன்வார் - கொசோவோ அதிபர் சந்திப்பு!

- Shan Siva
- 02 May, 2025
புத்ராஜெயா, மே 2: மலேசியாவிற்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ள
Kosovo நாட்டின் அதிபர் Dr Vjosa Osmani Sadriuவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெர்டானா புத்ரா வளாகத்தில் வரவேற்றுப் பேசினார்.
காலை 9 மணிக்கு இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
இரு நாட்டுத்
தலைவர்களும் தங்கள் நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை
வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும் சந்திப்பாக இது அமைந்துள்ளதாக எதிர்பார்க்கபப்டுகிறது.
துணைப்
பிரதமர்களான டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபடில்லா
யூசோப், அரசாங்கத்தின் தலைமைச்
செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் ஆகியோரும் ஒஸ்மானியை வரவேற்க
உடனிருந்தனர்.
பின்னர் ஒஸ்மானி
ராயல் மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாலியனைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் மற்றும் 103 பணியாளர்களைக் கொண்ட மரியாதை அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்
மாதம் பதவியேற்ற பிறகு, ஒஸ்மானி மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம்
இது என்பது குறிப்பிடத்தக்கது.
2024 ஆம் ஆண்டில்,
மலேசியாவிற்கும் கொசோவோவிற்கும் இடையிலான மொத்த
இருதரப்பு வர்த்தகம் 60 லட்சம் அமெரிக்க
டாலரை எட்டியது.
மலேசியாவின் முக்கிய ஏற்றுமதிகளில் பாமாயில், மின் மற்றும் மின்னணு பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கும்!Presiden Kosovo, Dr. Vjosa Osmani bertemu Perdana Menteri Anwar di Putrajaya. Mereka bincang kerjasama ekonomi dan politik. Lawatan ini yang pertama sejak 2021. Jumlah dagangan Malaysia-Kosovo mencecah USD 6 juta pada 2024, termasuk eksport minyak sawit dan barangan elektrik.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *