ரஷ்யாவுடன் போரில் ஈடுபட போகும் ரோபோ நாய் அடுத்து "பேட் டூ"!

top-news
FREE WEBSITE AD

ரஷ்யாவுடன் போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் தமது இராணுவ நடவடிக்கைகளுக்காக புதிதாக ரோபோ நாய் (Robot Dog) ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரியவந்துள்ளது.

உக்ரைன் இராணுவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்கள் பற்றாக்குறையே குறித்த ரோபோ நாய் உருவாக்கப்பட்டமைக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

அந்தவகையில், "Bad One" என பெயரிடப்பட்டுள்ள குறித்த ரோபோ நாயானது, இராணுவ நடவடிக்கைகளிலும், போர்களத்திலும் விரைவில் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.குறிப்பாக இவை கண்ணிவெடிகளை கண்டறிதல் போன்ற ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெயிர் வைக்கப்படாத ஒரு பகுதியில் நடத்தப்பட்ட செயல்திறன் விளக்கத்தின் போது குறித்த ரோபோ நாய் அதற்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கு ஏற்றவாரு செயல்பட்டதாக அதனை உருவாக்கியவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மேம்படுத்தப்பட்ட மாதிரிகளான "Bad Two" என்ற மற்றுமொரு ரோபோ நாய்களை உருவாக்கியுள்ளதாகவும் ஒரு சில பாதுகாப்புக்காரணங்கள் காரணமாக அவை தொடர்பான தகவல்களை வெளியிட முடியாது என உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிதத்தக்கது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *