மோடி-ட்ரம்ப் கைத்தொலைபேசியின் வழி இரண்டாம் பேச்சு வார்த்தை!

- Muthu Kumar
- 28 Jan, 2025
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் போனில் பேசியுள்ளார்.
அப்போது உலக நாடுகளின் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த உரையாடலின் போது இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு உறவுகள் குறித்தும் விவாதித்துள்ளனர்.
மேலும் உலகளாவிய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை குறித்தும் ஒருங்கிணைப்பு குறித்தும் இருவரும் பேசியுள்ளனர். சில முக்கிய விவகாரங்கள் குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் எக்ஸ் தளத்தில், எனது அன்பு நண்பர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன் பேசியதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாம் முறை பதவிக்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *