இன்று மோடி மற்றும் டிரம்ப் சந்திப்பு-மோடியின் 6 முக்கிய திட்டங்கள்!

top-news
FREE WEBSITE AD

கடந்த 10ம் தேதி ஃப்ரான்ஸ் சென்ற இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான மாநாட்டிலும் பங்கேற்றார். இந்நிலையில் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியை இந்திய பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனி விமானம் மூலம் வாஷிங்டனில் தரையிறங்கிய மோடியை, அமெரிக்க உயரதிகாரிகள் நேரில் வரவேற்றனர். தொடர்ந்து, விமான நிலைய வளாகத்தில் குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர் ,மோடி மோடி என முழக்கங்களை எழுப்பினர். அவரை வரவேற்று கைகளில் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். தொடர்ந்து, அவர்களின் அருகில் சென்ற பிரதமர் பொதுமக்களுடன் கைகளை குலுக்கி புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட மோடி பிளேயிர் மாளிகையில் ஓய்வு எடுத்து வருகிறார்.

அமெரிக்கவை அடைந்த பிறகு இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், 'குளிர்காலக் குளிரில் ஒரு அன்பான வரவேற்பு! குளிரான காலநிலை இருந்தபோதிலும், வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் என்னை மிகவும் சிறப்பான வரவேற்போடு வரவேற்றுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள்' என குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அவரை இந்திய பிரதமர் மோடி முதல்முறையாக சந்திக்க உள்ளார். அமெரிக்காவில் இருக்க உள்ள 36 மணி நேரத்தின் போது ஆறு இருதரப்பு சந்திப்புகளை பிரதமர் மோடி நடத்துவார். அவர் வெள்ளை மாளிகைக்கு எதிரே உள்ள அமெரிக்க அதிபர் விருந்தினர் மாளிகையான பிளேர் ஹவுஸில் தங்கியிருக்கிறார்.

• இன்று மாலை 4 மணிக்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்பை நடத்தவுள்ளார். பிராந்திய மற்றும் சர்வதேச நிலைமை குறித்த விவாதங்களைத் தவிர, பல்வேறு இருதரப்பு பிரச்சினைகள் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

• ட்ரம்ப்-மோடி சந்திப்பைத் தொடர்ந்து மாலையில் அமெரிக்க அதிபருடன் தனிப்பட்ட இரவு விருந்து நடைபெறும். சந்திப்புக்கு முன்னரோ அல்லது பின்னரோ இரு தலைவர்களும் ஓவல் அலுவலகத்தில் ஊடகங்களைச் சந்திப்பார்கள்.

• குடியரசுக் கட்சித் தலைவர் டிரம்பை இரண்டாவது முறையாகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் அவரை சந்திக்கும் நான்காவது நாட்டுத் தலைவராக இந்திய பிரதமர் மோடி இருப்பார்.

• இதனிடையே, பல்வேறு நிறுவனங்களைச் சார்ந்த உயர்மட்ட தலைவர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

முன்னதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதலில் அமெரிக்காவிற்கு பயணம் செய்தார், அதைத் தொடர்ந்து ஜப்பானின் ஷிகெரு இஷிபாவும் வருகை தந்தார். ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லா செவ்வாயன்று அமெரிக்காவிற்கு விஜயம் செய்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *