இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டமொபைல் கண்காட்சியை மோடி துவங்கி வைத்தார்!

- Muthu Kumar
- 18 Jan, 2025
இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டமொபைல் கண்காட்சியான பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ கண்காட்சியை பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார்.டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த துவக்க விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பல கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி தயாரிபபுகள் வெளியிடப்படவுள்ளன.
இந்தியாவில் உள்ள ஆட்டோமொபைல் துறையை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த துறையில் உள்ள அனைத்து உட்பிரிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே கண்காட்சியாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்ற கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது டில்லியில் உள்ள பாரத் மண்டபம், யசோபூமி, மற்றும் இந்தியா எக்ஸ்போ சென்டர் ஆகிய இடங்களில் இந்த கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், டயர்களை தயாரிக்கும் நிறுவனங்கள், ஆட்டேமொபைல் குறித்த தொழிற்நுட்பங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், எலெக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பான நிறுவனங்கள், பேட்டரி தொழிற்நுட்பத்தில் இருக்கும் நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துகின்றன.
நேற்று இந்திய பிரதமர் மோடி இந்த கண்காட்சியை நேரடியாக வந்து துவக்கி வைத்தார். இதுமட்டுமல்லாமல் அங்கு உள்ள ஸ்டால்களை எல்லாம் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டார். அங்கு இவருக்கு ஒவ்வொரு நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை பற்றி எடுத்து கூறினார்கள். இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என்பதை அவர் பார்வையிட்டார்.
அப்பொழுது மஹிந்திரா நிறுவனம் தங்கள் கார்களை காட்சிப்படுத்தியிருந்த இடத்தை பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். அந்நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் தொழிற்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவு தலைவரும் தமிழருமான வேலுசாமி பிரதமர் மோடிக்கு அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து விளக்கி கூறினார். அதை பிரதமர் மோடி பொருமையாகவும் கவனமாகவும் கேட்டுக்கொண்டார். இநத வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பலர் இதை பகிர்ந்து வருகிறார்கள். தமிழர் ஒருவர் பேச்சை பிரதமர் மோடி கேட்டு வருவதை பலர் பெருமையாக தருணமாக பார்க்கிறார்கள்.
நேற்று துவங்கிய இந்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சியில் முதல் நாள் மீடியா நாளாக ஒதுக்கப்பட்டது. நேற்று இந்த கண்காட்சியில் மீடியாகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. நேற்று வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் முக்கியமான தயாரிப்புகளை வெளியிட்டது. மாருதி, ஹூண்டாய் சுஸூகி, ஹீரோ மோட்டாகார்ப், பிஎம்டபிள்யூ, பென்ஸ், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார், டாடா மோட்டார்ஸ், கியா, போர்ஷே, ஸ்கோடா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை வெளியிடுகின்றன.
இன்று மீடியா மற்றும் டீலர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பிறகு 22ம் தேதி வரை பொதுமக்கள் இந்த கண்காட்சியை நேரில் சென்று காண முடியும். இந்த கண்காட்சி குறித்து இந்தியா முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மிக ஆர்வமாக காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி தங்கள் தயாரிப்புகளை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிடுகின்றனர்.
இந்த கண்காட்சியில் மாருதி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா கார், சுஸூகி நிறுவனத்தின் இ- ஆக்ஸெஸ் எலெக்டரிக் ஸ்கூட்டர், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210, எம்ஜி சைபர்ஸ்டர், டாடா சியாரா இவி, உள்ளிட்ட தயாரிப்புகள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் சுமார் 40-50 கார்கள் மற்றும் ஏகப்பட்ட டூவீலர்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *