உலக நலனுக்காகத் தான் கடவுள் என்னை காப்பாற்றினார்-டொனால்ட் ட்ரம்ப்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், நேற்றிரவு 1 மணியளவில் முறைப்படி டொனால்டு டிரம்ப் பதவியேற்று கொண்டார். அப்போது ராணுவ பீரங்கி குண்டுகள் முழங்கின. இந்நிகழ்ச்சியில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள், உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அப்போது பதவியேற்பு விழாவில் பேசிய டொனால்டு டிரம்ப் , "அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில் பறக்க விடுவோம் என்றும் அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்க உள்ளோம் என்றும் செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய டொனால்டு டிரம்ப் ,பலம் வாய்ந்த, சுதந்திரம் நிறைந்த மற்றும் நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே என்னுடைய நோக்கம் என்றும் இதற்கு முன்பு எப்போதும் கிடைக்காத வாய்ப்பு அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது என்றும் அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு வந்திருக்கிறது என்றும் அமெரிக்காவின் தென் எல்லைகளில் அவசர நிலையை அறிவிக்கப்படுகிறது என கூறினார்.

ஜோ பைடனால் எல்லை பாதுகாப்பு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை என்றும் இயற்கை பேரிடர்களை பைடன் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என பேசிய டொனால்டு டிரம்ப் அமெரிக்காவில், ஆண், பெண் என்ற 2 பாலினங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என்றும் ராணுவத்திற்கு நாட்டை பாதுகாப்பதே இனி கடமையாக இருக்கும் என்றும் உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என கூறினார் .

நாங்கள் பனாமா கால்வாயை மீட்டெடுக்க போகிறோம். சட்டத்திற்கு உட்படாத குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவில் நிலவும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்படும்,வளங்களை அதிகரிக்கக் கூடிய நாடாக அமெரிக்காவை மாற்றுவோம்.

தைரியத்துடனும், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் செயல்படும் தருணம் இது. உலகிலேயே மதிக்கப்படும் நாடாக அமெரிக்கா மீட்டெடுக்கப்படும். என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.இதனிடையே உலக நலனுக்காக கடவுள் தன்னை காப்பாற்றியதாக துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து டொனல்டு டிரம்ப் தனது உரையின்போது தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *