FADHLINA கட்சி மகளிருக்கு என்ன செய்தார்? நேரடி விவாதத்திற்கு அழைத்த Rodziah!

- Sangeetha K Loganathan
- 18 May, 2025
மே 18,
பி.கே.ஆர் கட்சியின் தேசிய மகளிர் தலைவியாக இருக்கும் Fadhlina sidek திறமையான அமைச்சர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றாலும் கட்சியில் மகளிர் நலனுக்காகவும் மகளிர் மேம்பாட்டுக்காகவும் Fadhlina sidek முழுமையாகச் செயல்படவில்லை என Ampang நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய மகளிர் தலைவி வேட்பாளருமான Rodziah Ismail தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியில் மகளிர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியிருப்பதாகவும் ஒரு சில முக்கிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தில் கட்சி இப்போது இருப்பதாகவும் Rodziah Ismail தெரிவித்தார்.
உண்மையில் Fadhlina sidek திறமியான அமைச்சர். ஆனால் பி.கே.ஆர் கட்சியில் மகளிர் எதிர்காலம் குறித்து எந்தவொரு நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. Fadhlina sidek கடந்த 3 ஆண்டுகளாக மகளிர் தலைவியாக இருந்து என்ன செய்தார் என்பதைப் பற்றி விவாதிக்க அவருடன் சிறப்பு நேரடி விவாதம் நடத்த தாம் தயாராக இருப்பதாகவும் இதற்கு Fadhlina sidek சம்மதித்தால் நேரடியாக விவாதம் நடத்த தாம் தயார் என்றும் Ampang நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் தேசிய மகளிர் தலைவி வேட்பாளருமான Rodziah Ismail தெரிவித்தார்.
Rodziah Ismail mempersoalkan sumbangan Fadhlina Sidek sebagai Ketua Wanita PKR, walaupun mengakui keupayaannya sebagai menteri. Rodziah mencabar Fadhlina untuk debat terbuka mengenai usaha memperjuangkan hak dan masa depan wanita dalam parti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *