ஆலயங்களிலும் தமிழ்ப்பள்ளிகளிலும் அரசியல் பேசக் கூடாது-டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

ஜோர்ஜ்டவுன், மே 20-

நமது இந்து ஆலயங்களிலும் தமிழ்ப் பள்ளிகளிலும் அரசியல் பேசக் கூடாது. பல தமிழ்ப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள்.

தமிழ்ப்பள்ளிகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் அரசியல் நடத்தக் கூடாது. எங்களைப் போன்ற அரசியல்வாதிகளிடமும் அரசியல் பண்ணக்கூடாது. அரசியல்வாதிகள் கொடுப்பார்கள் என அவர்கள் கைகளை எதிர்பார்த்து காத்திருக்கவும் கூடாது என்றார், பினாங்கு மாநில சுற்றுச்சூழல் வீடமைப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ

சுந்தரராஜ சோமு.நேற்று பிற்பகல் 2 மணிக்கு பினாங்கு கொம்தார் மாநாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் -பினாங்கு கிளை (பெர்த்தாமா பினாங்கு மூன்றாம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அரசியல்வாதிகள் எவ்வளவு தான் கொடுக்க முடியும். நானும் தான் எனக்கு இருப்பதைக் கொண்டு தமிழ்ப் பள்ளிகளுக்கு கொடுத்து வருகிறேன். ஆனால் எவ்வளவு தான் கொடுக்க முடியும். எனக்கு கிடைக்கும் அரசாங்க நிதி உதவியைக் கொண்டு சமுதாயத்தில் எத்தனையோ பிரச்சினைகளுக்கு தர வேண்டி இருக்கிறது. இருப்பினும் என்னாலும் கொஞ்சம் தான் தர முடிகிறது. என்னுடைய சம்பளத்தில் இருந்தும் நான் தந்து வருகின்றேன். நான் ஏழை அல்ல. வசதி உள்ளவன். எனவே கொடுக்கின்றேன். நான் பெற்றுக் கொள்பவன் அல்ல என அவர் மேலும் கூறினார்.

பினாங்கு மாநிலத்தில் 28 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அடுத்த 29ஆவது தமிழ்ப் பள்ளி பினாங்கில் அமைக்கப்பட வேண்டும் என மாநில பெர்தாமா பேரவை கேட்கிறது. அதற்கு முன், இப்போது இருக்கும் 28 தமிழ்ப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் நமக்கு முக்கியமாக உள்ளது என கூறிக் கொள்கிறேன்.

இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். காலம் நேரம் வரும்போது 29ஆவது தமிழ்ப் பள்ளி அமைக்கலாம். இப்போது இருக்கும் தமிழ்ப் பள்ளிகளை மேம்படுத்தி தரமுடன் செயல்பட நாம் அனைவரும் ஆவன செய்வோம் என்றார் அவர். தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் நிதி உதவிக்கும் எப்போதும் அரசியல்வாதிகளை நாடுவதை விட்டு விட வேண்டும். நாம் அரசியல்வாதிகளை தேடிச் செல்லக் கூடாது. அவர்கள்தான் நம்மைத் தேடி வர வேண்டும்.

நமக்கு தேவையான நிதி உதவியை நாமே தேடிக் கொள்ள வேண்டும். பொது அமைப்புகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ். ஆர். திட்டத்தின் கீழ் நமக்குத் தேவையான நிதி உதவி தர முடியும் என மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தேசியப் பேரவையின் பெர்த்தாமா) துணைத் தலைவர் குமரன் மாரிமுத்து தமதுரையில் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், சில மாதங்களுக்கு முன்னர் கங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு லாரியால் மோதப்பட்டு கை கால்கள் இழந்த அப்பள்ளியின் இரண்டு மாணவர்களுக்கு பினாங்கு மாநில பெர்த்தாமா இயக்கம் 1,500 ரிங்கிட் நன்கொடையை பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் வழங்கியது. இதை அடுத்து, தமிழ் பள்ளி முன்னாள் மாணவரும் தொழிலதிபருமான சண்முகம் 10,000 வெள்ளியும், டத்தோ மரியதாஸ் கோபால் 500.00 வெள்ளியும் ரொக்கமாக வழங்கினர். இந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு லட்சம் வெள்ளியைத் திரட்டி வைப்புத் தொகையாகத் தர உள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தரராஜூ மேலும் விளக்கம் அளித்தார்.

Datuk Sundararaju menegaskan tiada politik dalam kuil Hindu dan sekolah Tamil. Kepala sekolah tidak patut terlibat politik. Fokus perlu pada memajukan 28 sekolah Tamil sedia ada di Pulau Pinang dengan dana daripada NGO dan korporat, bukan hanya harap bantuan politik.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *