என்னைப் பொருத்தவரை இந்த 3 பேர் தான் புத்திசாலி!

top-news
FREE WEBSITE AD

உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்க கூடியவர் எலான் மஸ்க். தன்னுடைய தனித்துவமான சிந்தனைகள் மூலம் முன்னணி நிறுவனங்களை உருவாக்கி தொழில் முனைவோர்களுக்கு எல்லாம் முன்னுதாரணமான நபராக இவர் மாறியிருக்கிறார்.

பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக மின்சார கார்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனம், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கிய ஸ்பேஸ் எக்ஸ், செயற்கைக்கோள் மூலம் இணைய வசதியை வலுப்படுத்தி இருக்கும் ஸ்டார்லிங்க் நிறுவனம் , சுரங்கப்பாதை திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட தி போரிங் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களை நிறுவி வெற்றிகரமான தொழிலில் முனைவோராக உருவெடுத்திருக்கிறார்.அந்த வகையில் உலகின் ஸ்மார்ட்டான நபராகவும் எலான் மஸ்க் அறியப்படுகிறார்.

அமெரிக்க அரசில் முக்கிய பொறுப்புகள் கூட எலான் மஸ்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நண்பர் எலான் மஸ்க் புத்திசாலித்தனமானவர், ஸ்மார்ட் ஆனவர் , மேதை என தொடர்ந்து பாராட்டி வருகிறார். இந்த நிலையில் தனக்குத் தெரிந்து  இந்த உலகத்தில் ஸ்மார்ட்டான நபர்கள் மூன்று பேர் தான் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எலான் மஸ்க், தன்னை பொறுத்தவரையில் தகவல் தொழில்நுட்ப துறையில் ஓராக்கில் நிறுவனத்தின் துணை நிறுவனர் லாரி எலிசன், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், கூகுள் இணை நிறுவனர் லாரி பேஜ் ஆகிய மூன்று பேர் தான் இதுவரை நான் சந்தித்த நபர்களிலேயே புத்திசாலித்தனமானவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

அப்போது அவரிடம் இதுவரை நீங்கள் சந்தித்த தலைமை செயல் அதிகாரிகளிலேயே உங்களை மிகவும் ஈர்த்தவர் மற்றும் மிகவும் புத்திசாலித்தனமான நபர் என உங்களுக்கு தோன்ற வைத்தவர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க், ஒராக்கில் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் மிகவும் திறமையானவர் இந்த உலகிலேயே மிகவும் ஸ்மார்ட்டான மக்களில் இவர் முக்கியமானவர் என கூறியுள்ளார்.

எலான் மஸ்க், லாரி எலிசன் இருவருமே பல ஆண்டுகளாக சிறந்த நட்பினை பாராட்டி வருகின்றனர். தகவல் தொழில்நுட்ப ரீதியாக எலான் மஸ்க் நிறுவனத்திற்கு தேவையான பல்வேறு உதவிகளை லாரி எலிசன் வழங்கியுள்ளார். அடுத்ததாக தன்னை ஈர்த்த ஸ்மார்ட்டான மக்களில் அமேசானின் ஜெஃப் பெசோஸும் ஒருவர் என எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திற்கும் இடையே கடுமையான போட்டி இருந்து வரும் இந்த நிலையில் எதிரி நிறுவனத்தின் தலைவர் தனக்கு பிடித்தமானவர் என எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.

பல்வேறு கடினமான விஷயங்களையும் முக்கியமான விஷயங்களையும் கொண்டு வந்திருப்பவர் ஜெஃப் பெசோஸ் என பாராட்டியுள்ளார்.மேலும் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ் தன்னுடைய புத்திசாலித்தனத்தை சரியான முறையில் செயல்படுத்தி வெற்றியடைந்தவர் என எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *