பத்து ஃபெரிங்கியில் இனி குதிரை சவாரி இருக்காது!
- Shan Siva
- 30 Jul, 2024
ஜார்ஜ் டவுன், ஜூலை 30: ஜார்ஜ் டவுன் பத்து ஃபெரிங்கி கடற்கரையில்
அனைத்து குதிரை சவாரி நடவடிக்கைகளையும் செப்டம்பர் 1 முதல் தடை செய்ய பினாங்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
குதிரை சவாரியால்
பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து பல புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு
எடுக்கப்பட்டதாக மாநில உள்ளாட்சி, நகர வளர்ச்சிக்
குழுவின் தலைவர் Jason H'ng Mooi Lye தெரிவித்தார்.
அண்மையில் இதற்காக
ஒரு கூட்டத்தை நடத்தி, செப்டம்பர் 1 முதல் அப்பகுதியில் குதிரை சவாரி செய்வதை தடை
செய்ய முடிவு செய்ததாக அவர் கூறினார். பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த
முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்,
Batu Ferringhi கடற்கரையில்
குதிரைகளின் எண்ணிக்கை 30 ஆக
அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு
இருந்த சில குதிரைகளுடன் ஒப்பிடுகையில், குதிரைகள் நோய்வாய்ப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தக் குதிரைகள்
கிராம பகுதிகளில் வைக்கப்படுகின்றன. மேலும் குதிரை எருவால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து
குடியிருப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.
பொது பாதுகாப்பு
மற்றும் சுகாதார காரணங்களுக்காக, இந்த தடையை
விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று அவர்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *