பிரென்ச் ஃபிரைஸ் செய்து வாக்கு சேகரிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!
- Muthu Kumar
- 21 Oct, 2024
தேர்தல் நெருங்கிவிட்டது என்றாலே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வித்தியாசம் வித்தியாசமாக எதாவது செய்து பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரிப்பார்கள்.குறிப்பாக அதில் பலரும் கையாண்ட யுக்தி என்றால் சமையலை வைத்துத்தான்.
இந்த அரசியல் யுக்தி சில நாடுகளில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் பிரபலமாகிவிட்டது போல. ஏனென்றால், அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் டோனால்ட் டிரம்ப் அதைப்போல ஒரு யுக்தியைப் பின்பற்றியுள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டிரம்ப் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்.
அப்படி தான் தேர்தல் பிரசாரத்திற்காக, இன்று பென்சில்வேனியாவுக்கு சென்றிருந்த டிரம்ப் அங்கு மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக அங்கிருந்த மேக்டொனால்ட்ஸ் என்கிற கடையில் பிரென்ச் ஃபிரைஸ் செய்து, அதைப் பக்காவாக பேக் செய்துள்ளார். இது அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
பிரென்ச் ஃபிரைஸ் செய்தது மட்டுமில்லாமல் கடைக்கு வந்த வாடிக்கையாளருக்கு பேக் செய்து விற்பனையும் செய்தார். உலகம் முழுவதும் தற்போது பிரபலமாக இருக்கும் பிரென்ச் ஃபிரைஸ் உருவானது என்றால் மேக்டொனால்ட்ஸ் கடையில் தான். அந்த கடையிலேயே டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு பிரென்ச் ஃபிரைஸ் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இது தொடர்பான காணொளிகளும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *