2024-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில் டொனால்டு டிரம்ப்!

- Muthu Kumar
- 13 Dec, 2024
அமெரிக்கா அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் களம் இறங்கிய டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரி மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொள்ள உள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது, சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை விரட்டி அடிப்பேன் எனத் தனது கொள்கையை டிரம்ப் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, 'அதிபராகப் பதவியேற்ற 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷ்யா இடையே நடக்கும் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்' என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும் ட்ரூத் சோசியல் மீடியாவில்,' டிரம்ப் தலைமையிலான ஆட்சியில், தேசிய அவசரநிலை கொண்டு வரப்படும். ராணுவத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாகப் புலம் பெயர்ந்தவர்களை நாடு கடத்த உள்ளார்' என ஒருவர் பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவுக்குப் பதில் அளித்த டிரம்ப், உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். இந்தப் பதில் சர்வதேச அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.பல்வேறு அதிரடியான நடவடிக்கை எடுத்துவரும் டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி மாதம் அதிபராக முறைப்படி பதவியேற்றுக் கொள்ள உள்ளார்
இந்தநிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஆங்கில வார இதழான 'டைம்' சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய நிகழ்வுகளிலும், செய்திகளிலும் அதிகம் செல்வாக்கு மிக்க நபரை தேர்வுசெய்து டிசம்பர் மாத இதழில் வெளியிட்டு வருவது வழக்கம்.
இதற்காக சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச்சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுக்கும். அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும்.
இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர் பற்றிய வாக்கெடுப்பில் அமெரிக்க அதிபராக தேர்வு பெற்ற டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்து 'டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்.ஏற்கனவே, கடந்த 2016-ம் ஆண்டு டைம் இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் டிரம்ப் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *