இஸ்ரேலுக்கு பதிலடி வேண்டாம்!நம் நடவடிக்கை அறிவுபூா்வமாக இருக்க வேண்டும்-அலி லரிஜானி!

top-news
FREE WEBSITE AD

நம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு உணா்ச்சிபூா்வமாக பதிலடி கொடுக்கக் கூடாது என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனியின் பாதுகாப்பு ஆலோசகா் அலி லரிஜானி எச்சரித்துள்ளாா்.

தற்போது நடைபெற்றுவரும் போரை ஈரானுக்குக் கொண்டுவர இஸ்ரேல் விரும்புகிறது. அதற்காக அந்த நாடு விரிக்கும் வலைதான் ஈரான் ராணுவ நிலைகளில் நடத்திய தாக்குதல்.எனவே, அந்த வலையில் சிக்கும் வகையில் இஸ்ரேலுக்கு நாம் உணா்ச்சிவசப்பூா்வமாக பதிலடி கொடுக்கக்கூடாது. நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையும் அறிவுபூா்வமானதாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரில், ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் மற்றொரு நிழல் ராணுவமான லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவருகின்றனா். இதனால் அந்த அமைப்பினருடனும் இஸ்ரேல் போரிட்டுவருகிறது.

இந்தச் சூழலில், ஈரான் வந்திருந்த ஹிஸ்புல்லா தலைவா் இஸ்மாயில் ஹனீயேவை இஸ்ரேல் உளவுப் பிரிவு கடந்த ஜூலை 31-ஆம் தேதி படுகொலை செய்தது. பின்னா் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவா் ஹஸன் நஸ்ரல்லாவும் இஸ்ரேல் ராணுவத்தால் லெபனானில் கடந்த மாதம் 27-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா்.

அதற்குப் பழிவாங்கும் வகையில், இஸ்ரேலின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து 180 அதிநவீன ஏவுகணைகளை ஈரான் கடந்த மாதம் 1-ஆம் தேதி ஏவியது. அவற்றில் கணிசமானவை இடைமறித்து அழிக்கப்பட்டாலும், பல ஏவுகணைகள் இலக்கைத் தாக்கின. இந்தத் தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் வான்பாதுகாப்பு நிலைகள், ஏவுகணை மையங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 26-ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் நான்கு ஈரான் வீரா்கள் உயிரிழந்தனா்.

இதற்கு மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அயதுல்லா கமேனி கடந்த வாரம் சூளுரைத்தாலும், எப்போது தாக்குதல் நடத்தப்படும், அது எவ்வளவு தீவிரமானதாக இருக்கும் என்பதை அவா் தெரிவிக்கவில்லை.அதற்கு முன்னதாக, இஸ்ரேலின் தாக்குதலை மிகைப்படுத்தவும் கூடாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது என்று வாா்த்தைகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்தி அவா் பேசியிருந்தாா்.

இந்தச் சூழலில், இஸ்ரேலுக்கு உணச்சிப்பூா்வமாக பதிலடி கொடுக்கக்கூடாது என்று அவரது ஆலோசகா் கூறியிருப்பது, இஸ்ரேல் மீது கடுமையான பதிலடித் தாக்குதலை ஈரான் நடத்தாது என்பதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *