வெறுப்பு அரசியலில் ஈடுபடாதீர்கள்! - பெரிக்காத்தான் கூட்டணிக்கு DAP முஸ்லீம் தலைவர்கள் கண்டனம்
- Shan Siva
- 09 Aug, 2024
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 9: நெங்கிரி இடைத்தேர்தலுக்கான சமீபத்திய பெரிக்காத்தான்
நேஷனல் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின்
போது ‘காஃபிர் ஹர்பி’ மலாய்காரர் அல்லாதவர்களை
முத்திரை குத்திய வைரல் வீடியோவில் இடம்பெற்ற நபர் மன்னிப்புக் கேட்க வேண்டும்
என்று பல மலாய் டிஏபி தலைவர்கள் கோரியுள்ளனர்.
டிஏபி மத்திய செயற்குழு உறுப்பினர்களான Sheikh Umar Bagharib Ali, Bangi MP Syahredzan Johan, Bentong MP Young Syefura Othman ஆகியோர் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
மேலும், PAS - பெரிக்காத்தான் தலைவர்கள், அந்த செராமாவில் பயன்படுத்தப்பட்ட வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்த தங்கள்
நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
இதுபோன்ற
வெறுப்பு அரசியலில் ஈடுபடாமல், முதிர்ச்சியான
மற்றும் அமைதியான முறையில் பிரச்சாரம் செய்யுமாறு பெரிக்காத்தானை தாங்கள்
கேட்டுக்கொள்வதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டிஏபி கட்சி, முஸ்லீம்கள்
உட்பட பலதரப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சட்டபூர்வமான கட்சி என்பதால், தனிநபரின் இத்தகைய செயல்களை வன்மையாகக்
கண்டிப்பதாக மூவரும் தெரிவித்தனர்.
காஃபிர் ஹர்பி
என்ற சொல் வரலாற்று ரீதியாக முஸ்லீம் அல்லாதவர்களை போரின் சூழலில் எதிரிகளாகக்
கருதுவதைக் குறிக்கிறது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனவே, நெங்கிரி செராமாவில் வெளியிடப்பட்ட அந்த
அறிக்கை டிஏபியின் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு எதிரான புறக்கணிப்பு செயலாகும்,
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று
அவர்கள் கூறினர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *