போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு- மூன்றாவது வரிசையில் டிரம்ப்!

top-news
FREE WEBSITE AD

வாட்டிகன் நெறிமுறைகளின்படி, போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் ஜனாதிபதி ட்ரம்பிற்கு முன் வரிசையில் வாய்ப்பு கிடைக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு, உலகின் முதன்மையான தலைவர்கள் பலர் ரோம் நகருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். சனிக்கிழமை திட்டமிட்டபடி போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு முன்னெடுக்கப்படுகிறது.

200,000 வரையிலான கூட்டத்தைப் பாதுகாக்க உதவும் வகையில் இத்தாலி அரசாங்கம் வாட்டிகன் நகரத்தைச் சுற்றி அதி உயர் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளது. இதில் 200க்கும் மேற்பட்ட மிக முக்கியமான வெளிநாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், வேல்ஸ் இளவரசர் வில்லியம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உள்ளிட்டவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

இதனிடையே, இரண்டாவது வரிசையில் இடம் கிடைக்க போராடிய ஜனாதிபதி ட்ரம்புக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக பின்பற்றப்படும் வாட்டிகன் நெறிமுறைகளின்படி இரண்டாவது வரிசையில் அரச குடும்பத்து உறுப்பினர்கள் மற்றும் திருச்சபையின் மூத்த உறுப்பினர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஜனாதிபதி ட்ரம்ப் தனது சகாக்களுடன் மூன்றாவது வரிசையில் இடம்பெறுவார். வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை அவமானப்படுத்தியதன் பின்னர், முதல் முறையாக வாட்டிகன் இருவரும் சந்திக்க உள்ளனர்.

ஆனால் இருவரும் ஒரே வரிசையில் இருவேறு பகுதிகளில் அமர உள்ளனர். மேலும், ட்ரம்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.புலம்பெயர் மக்கள் விவகாரத்தில் போப் பிரான்சிஸுடன் கருத்து மோதலில் ஏற்பட்டவர் ஜனாதிபதி ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *