சட்டவிரோதத் தொழில்சாலையில் 98 பேர் கைது! RM 97 மில்லியன் பறிமுதல்!

top-news

மே 27,

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக மரங்களை வெட்டி தொழில்சாலைகளை அமைக்கும் கும்பலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட Ops Sawmill சிறப்புச் சோதனையில் RM 97.3 மில்லியன் மதிப்பிலானப் பல்வேறு பொருள்களைப் பறிமுதல் செய்ததாகவும் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தீபகற்ப மலேசிய வனப் பாதுகாப்பு அமலாக்கப் பிரிவின் இயக்குநரும் Ops Sawmill சிறப்புச் சோதனை பிரிவின் தளபதியுமான Abd Ramli zauyahhudin Mahli தெரிவித்தார். திரங்கானு, கிளாந்தான், பகாங் ஆகிய 3 மாநிலங்களில் 32 வனப்பகுதிகளில் சோதனையை மேற்கொண்டதாகவும் 18 வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முக்கிய சோதனையில் 232 பேர் மீது சோதனையை மேற்கொண்டதாகவும் 45 பேர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் நேரடியாக வனப்பகுதிகளை ஆக்கிரமித்து மரங்களைச் சட்டவிரோதமாக வெட்டியதாக நம்பப்படும் 98 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 58 உள்ளூர்வாசிகள் என்றும் 40 வெளிநாட்டினர்கள் என்றும் அனைவரும் 18 முதல் 80 வயதுக்குற்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கிளாந்தான் திரங்கானு மாநிலங்களிலிருந்து RM66.5 மில்லியன் மதிப்பிலும் பகாங்கில் RM31 மில்லியன் மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

Operasi khas Ops Sawmill berjaya menahan 98 individu dan merampas barangan bernilai RM97.3 juta hasil kegiatan pembalakan haram di 32 kawasan hutan di Kelantan, Terengganu dan Pahang. Seramai 58 warga tempatan dan 40 warga asing ditahan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *