பாகிஸ்தானுடன் அதிக வாய்ப்புகள்! - அன்வார்
- Muthu Kumar
- 04 Oct, 2024
கோலாலம்பூர், அக் 4:
ஹலால் தொழில் மற்றும் இஸ்லாமிய நிதி போன்ற துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால், பாகிஸ்தானுடன் மேலும் ஒத்துழைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய வருடாந்திர வர்த்தக அளவு கிட்டத்தட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று குறிப்பிட்ட அவர், இது பாமாயில் மற்றும் ஜவுளி போன்ற முக்கிய தொழில்களால் இயக்கப்படுகிறது என்றும், இது பாராட்டத்தக்கது என்று விவரித்தார்.
பாகிஸ்தானுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணமாகச் சென்றிருக்கும் அன்வார், இரு நாடுகளும் புதுமையான நிதிக் கருவிகளில் தடம் பதிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது, ஹலால் தொழிலில் மலேசியாவின் ஏற்றுமதி 7.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் ஹலால் உணவுத் துறையில் 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஏற்றுமதி இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது என்று அன்வார் குறிப்பிட்டுள்ளார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *