இந்தியர்கள் உட்பட உலக அளவில் "மெக்காவில் 1000 க்கும் மேற்பட்டோர்" பலி!

top-news
FREE WEBSITE AD

ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

அதேபோல், இந்தாண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத் எனும் தியாகத் திருநாளை கொண்டாடும் விதமாக ஜூன் 14ம் தேதி முதல் மெக்காவில் புனித யாத்திரை தொடங்கியது. இதில் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் சவுதி அரேபியா சென்றுள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த 16ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, நூற்றுக் கணக்கான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை மொத்தம் 1,081க்கும் அதிகமான ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களில் 658 போ் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் 1400க்கும் மேற்பட்ட எகிப்து நாட்டினரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் உடல்கள் மெக்காவுக்கு அருகில் உள்ள அல் - மொயிசம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் 250 பேர் சுயநினைவு இன்றி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இருந்து 1.75 லட்சம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்ட நிலையில், இதுவரை 80க்கும் மேற்பட்டோர் வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை சவூதியிலே அடக்கம் செய்ய அவர்களுடைய குடும்பத்தினர் அனுமதி அளித்துள்ளனர். சவூதியில் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் 0.4 சதவீதம் வெப்பம் அதிகரித்து வருகிறது. மெக்கா நகரில் இந்த வாரம் 51.8 டிகிரி (125 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை வெப்பம் நிலவியது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *