சீனாவில் வேலை அழுத்தம் - 5 AI விஞ்ஞானிகள் மரணம்!

- Muthu Kumar
- 16 Apr, 2025
அமெரிக்காவுடன் சீனா தொழில்நுட்ப போரில் சிக்கியுள்ளது. இந்த ஆண்டு சீனாவின் குறைந்த விலை மாதிரியான டீப்சீக் என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை தயாரித்து உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது.
சீனா வளர்ந்து வரும் ஏஐ திறமை மற்றும் உள்நாட்டில் வெற்றிபெற்றாலும், அந்த நாடு இந்த துறையில் முக்கியமான சிலரை இழந்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. விபத்துக்கள் அல்லது நோய் காரணமாக 5 சிறந்த ஏஐ விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளனர்.
எனினும் இது தொழில்துறையில் உள்ள அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் ஆராய்ச்சி சூழல் குறித்த கவலைகளை எழுப்பி உள்ளது. குறிப்பாக அவர்களில் பலர் அமெரிக்காவில் படித்து சீனாவிற்கு வேலைக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் அதிக சம்பளத்தை பெற்றாலும் கூட கடுமையான போட்டியினால் ஏற்படக்கூடிய மன அழுத்தத்துக்கு ஆளாவதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *