பினாங்கு கட்டுமானத்தளத்தில் இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு!

- Shan Siva
- 20 May, 2025
ஜார்ஜ் டவுன், மே 20: இரண்டாம் உலகப் போரின் நினைவுச்சின்னம் என்று நம்பப்படும் ஒரு பழைய வெடிகுண்டு, தஞ்சோங் தோகோங்கின் ஜாலான் ஶ்ரீ தஞ்சோங் பினாங்கில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பொதுமக்களிடமிருந்து இரவு 9.42
மணிக்கு போலீசாருக்குத் தகவல் கிடைத்ததாக தீமூர் லாவுட் காவல்துறைத் தலைவர் ஏசிபி
அப்துல் ரோசாக் முஹம்மது தெரிவித்தார்.
இதனை அடுத்து, பினாங்கு காவல் துறை தலைமையகத்தின்
(ஐபிகே) வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவு (யுபிபி) அந்தப் பொருளை ஆய்வு செய்து, அது இரண்டாம் உலகப் போருக்கு
முந்தைய வெடிக்காத வெடிகுண்டு (யுஎக்ஸ்ஓ) என்பதை உறுதிப்படுத்தியது.
அந்தப் பகுதி பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தியதாகவும், குண்டு இன்று அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அப்துல் ரோசாக் கூறினார்!
Sebuah bom lama dipercayai tinggalan Perang Dunia Kedua ditemui di tapak pembinaan di Tanjong Tokong. Polis mengesahkannya sebagai bom tidak meletup dan merancang pemindahan selamat setelah kawasan disahkan selamat oleh unit pemusnah bom.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *