பாரிசின் பரபரப்பான ரயில் நிலையத்தில் 2ம் உலகப்போரின் வெடிகுண்டு!

top-news
FREE WEBSITE AD

பிரான்ஸ் நாட்டில் பாரிசின் பரபரப்பான ரயில் நிலையத்தில் 2ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் கரே டு நோர்ட் ரயில் நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்து அங்கிருந்து வரும் போக்குவரத்து போலீசாரால் நிறுத்தப்பட்டது. செயிண்ட் டெனிஸ் புறநகர்ப் பகுதியில் பராமரிப்புப் பணிகளின் போது தண்டவாளங்களின் நடுவில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய ரயில் நிறுவனம் SNCF தெரிவித்துள்ளது.

காவல்துறையின் வேண்டுகோளின்படி யூரோஸ்டார் ரயில்கள் மற்றும் பிற அதிவேக மற்றும் உள்ளூர் சேவைகளை வழங்கும் ரயில் நிலையத்தில், நள்ளிரவு வரை போக்குவரத்து நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கரே டு நோர்ட் ரயில் நிலையம் பாரிஸின் பரபரப்பான ரயில் முனையமாகும். இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் சுமார் 7,00,000 பேருக்கு மேல் வந்து செல்வதாக SNCF தெரிவித்துள்ளது.

"காவல்துறையினரின் வேண்டுகோளின் பேரில் காலை 10:00 மணி வரை Gare du Nord இல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் வெடிக்காத வெடிகுண்டு தண்டவாளங்களுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது," என்று ரயில் வலையமைப்பான TER Hauts-de-Franceன் லேட்டஸ்ட் அப்டேட்டில் தெரிவித்துள்ளது. இதனால் நேற்று வெள்ளிக்கிழமை 10:30 மணிக்கு முன் புறப்படவிருந்த லண்டனில் இருந்து பாரிஸுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. நண்பகல் 11:00 மணிக்கு க்கு முன் பாரிஸிலிருந்து லண்டனுக்குச் செல்லும் பாதைகளும் ரத்து செய்யப்பட்டது. ப

யணிகள் தங்கள் ரயில் டிக்கெட்டுகளை இலவசமாக மாற்றிக் கொள்ள ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது, அதே வகுப்பில் மற்றொரு நாள் மற்றும் நேரத்தில் பயணம் செய்யலாம். தயவுசெய்து உங்கள் பயணத்தை வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்" என தெரிவித்துள்ளது. வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சேவைகள் மேலும் தாமதமாகும் என்று எச்சரிக்கை பலகைகள் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *