கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மத்திய அமைச்சரான எஸ்.எம். கிருஷ்ணா காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா.வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பல ஆண்டுகளாகவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த சூழலில், 92 வயதான கிருஷ்ணா காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை  அவரது வீட்டில் காலமானார். இவர் கர்நாடக மாநிலத்திற்கு கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை முதலமைச்சராக பொறுப்பு வகித்து இருந்தார். மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூரை சிலிகான் வேலி என்று மாற்றி கட்டமைத்ததில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பங்கு அளப்பரியது.

2004ம் ஆண்டு மகாராஷ்ட்ரா ஆளுநராக எஸ்.எம்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் அரசியலுக்கு திரும்பினார். மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக 2009ம் ஆண்டு தேர்வானார். பின்னர் மீண்டும் கர்நாடக அரசியலுக்கு திரும்பிய அவர் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து, அவர் கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து ஒதுங்கி பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பின்னர், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரது மனைவி பிரேமா. இவரது மகள் மாளவிகா கிருஷ்ணா. கேபே காஃபி நிறுவனத்தின் உரிமையாளர் இவர். இவரது கணவர் சித்தார்த்தா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *