ஜாா்ஜியாவின் புதிய அதிபராக முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி!

- Muthu Kumar
- 15 Dec, 2024
முன்னாள் கால்பந்து வீரா் மைக்கேல் கவெலஷ்விலி ஜாா்ஜியாவின் புதிய அதிபராக நேற்று தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜாா்ஜிய கனவுக் கட்சி, கடந்த அக்டோபரில் நாடாளுமன்றத் தோ்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நேற்று டிசம்பர் 14ம் தேதி சனிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் மைக்கேல் கவெலஷ்விலி புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
எனினும் நாளையுடன் பதவிக் காலம் முடியும் தற்போதைய மேற்கத்திய ஆதரவு அதிபா் சலோமி ஸூரபிச்விலி, மீண்டும் அதிபா் தோ்தல் முறை கொண்டு வரப்படும் வரை தான் மட்டுமே சட்டபூா்வ அதிபா் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *