கணவருக்கு மரணம் விளைவித்தார்- முன்னாள் விரிவுரையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை!

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், மே 27-

தன் கணவருக்கு மரணம் விளைவித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்ட முன்னாள் விரிவுரையாளர் ஒருவருக்கு, சிரம்பான் உயர் நீதிமன்றம் நேற்று 10 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்தது.
நீதிபதி ரொஹானி இஸ்மாயில் முன்னிலையில், குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 304(எ) இன் கீழ் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 58 வயதுடைய லாவ் செக் யான் என்ற அந்த முன்னாள் விரிவுரையாளர் திருத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கவில்லை.

அசல் குற்றச்சாட்டு மீள்பார்வை செய்யப்பட வேண்டும் என்ற தற்காப்புத் தரப்பினரின் விண்ணப்பத்தை அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக, லாவ்வின் வழக்கறிஞர் கிட்சன் ஃபூங் நீதிமன்றத்தில் முன்னதாக தெரிவித்தார்.
தன் 55 வயதுடைய கணவர் போ செங் ஹியாப்பை கொலை செய்ததாக லாவ் மீது குற்றவியல் சட்டத்தின் செக்ஷன் 302இன் கீழ் தொடக்கத்தில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரைக்குமான சிறை மற்றும் பிரம்படி வழங்க அந்த செக்ஷன் வழிவகுத்திருந்தது.கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி குற்றம் சுமத்தப்பட்டபோது அதை மறுத்து லாவ் விசாரணை கோரியிருந்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டிருந்த லாவ், கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிற்பகல் 3.30 முதல் 4.30 மணிக்கிடையில், சிரம்பானுக்கு அருகிலுள்ள
ராசா கெமாயான் கோல்பில் உள்ள தங்களின் இல்லத்தில் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.ஒரு கணக்காளரான போ, நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

Bekas pensyarah Law Seck Yan dijatuhi hukuman penjara 10 tahun oleh Mahkamah Tinggi Seremban selepas mengaku bersalah menyebabkan kematian suaminya pada 2018. Tuduhan asal di bawah Seksyen 302 dikurangkan kepada Seksyen 304(a) atas permohonan pihak pembelaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *