வடகொரியா பள்ளிகளில் கிம் ஜாங்-உன்னை கடவுளாக வழிபடுவதும் கட்டாயமாம்!

top-news
FREE WEBSITE AD

நாட்டை விட்டு ஓடிப்போன 23 வயது பெல்லா சியோ, வட கொரியாவின் பள்ளிகள் குறித்த பயங்கரமான பிம்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். பள்ளிகளில் குழந்தைகள் உடல் உழைப்பைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், கிம் ஜாங்-உன்னை கடவுளாக வழிபடுவதும் கட்டாயமாம். இங்கு குழந்தைகள் கல்வி என்ற பெயரில் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.

வட கொரியப் பள்ளிகளில் படிப்பது என்பது கிம் குடும்பத்தைப் புகழ்வதற்குச் சமம் என்கிறார் பெல்லா. ஒரு நாளில் ஏழு பாடங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு முதல் மூன்று பாடங்கள் கிம் ஜாங்-உன் மற்றும் அவரது மூதாதையர்களின் 'புரட்சிகர வாழ்க்கை வரலாற்றை' படிப்பதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் கணிதம், அறிவியல் அல்லது வேறு எந்தப் பாடத்தில் சிறந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களின் மதிப்பீடு இந்தப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொரு நாளும் கிம் குடும்பத்தின் புகைப்படங்களை சுத்தம் செய்து விசுவாசப் பாடல்களைப் பாடுவதன் மூலம் தொடங்குகிறது.

குழந்தைகளுக்கான உண்மையான போராட்டம் பள்ளியில் பாடவேளைகளுடனே தொடங்குகிறது. குழந்தைகளுக்கு பள்ளி மைதானத்தை சமன் செய்வது போன்ற கடினமான பணிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மூன்று முதல் நான்கு மணிநேர உடல் உழைப்பு தேவைப்படுகிறது. அவர்கள் 25 கிலோ எடையுள்ள மணல், கற்களால் நிரப்பப்பட்ட சாக்குகளை சுமக்க வேண்டும்.

கடுமையான குளிர்காலத்தில் கூட, பனிப்பொழிவு இருக்கும்போது கூட, பள்ளி தொடங்குவதற்கு முன்பு மாணவர்கள் பனியை அகற்ற வேண்டும். ஹைசனில், வருடத்திற்கு சராசரியாக 63 நாட்கள் பனிப்பொழிவு இருக்கும் என்கிறார் பெல்லா.

வட கொரியா தன்னை இலவசக் கல்வி வழங்கும் நாடு என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. இதுகுறித்து பெல்லா கூறுகையில், ''மாணவர்கள் 'இளைஞர் திட்டங்கள்', பள்ளி நிகழ்வுகள், ஆசிரியர்களின் பிறந்தநாள் மற்றும் குடும்ப விழாக்களுக்கு கூட பணம் செலுத்த வேண்டும்.

இதன் காரணமாக, பல பெற்றோர்கள் உணவுக்காகச் செலவிடும் பணத்தைக் கூடச் சேமித்து, குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சுமக்கின்றனர். கல்வியின் பெயரில் கிம் ஜாங்கின் நடத்தும் கொடுமைகளை தாண்டியே மாணவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது'' என்று பெல்லா கூறுகிறார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *