நாட்டை வடிவமைப்பதில் சமமான பங்கு தாய் மற்றும் பெண்களை போற்ற வேண்டும்-டாக்டர் வான் அசிசா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 19-

குடும்பம் உட்பட நாட்டை வடிவமைப்பதில் சமமான பங்கு வகிப்பவர்களில் தாய்மார்களும் பெண்களும் அடங்குவர்.ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமல்லாமல், ஆதரவளித்து, உடனிருந்து, பிரார்த்தனைகளுடன் தாய்மார்களை தினசரி போற்ற வேண்டும் என்று பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் நினைவூட்டினார்.

"முழுநேர இல்லத்தரசிகளாக இருக்கும் தாய்மார்கள், குழந்தைகளையும் குடும்பத்தையும் நிர்வகிப்பதில் தங்கள் கணவர்மார்களுக்கு உதவும் வகையில் அன்பு, கவனம், முயற்சி, சக்தி, நேரம் மற்றும் உழைப்பை அளித்து அவர்களை பேணுகிறார்கள்," என்றார் அவர். நேற்று கோலாலம்பூர், பண்டார் துன் ரசாக்கில் நடைபெற்ற குடும்ப தினம் மற்றும் 2025 ஆம் ஆண்டு அன்னையர் தினக் கொண்டாட்டத்தின்போது அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் அசிசா அவ்வாறு கூறினார்.

குடும்ப உறவை வலுப்படுத்துதல், சமூக ஆதரவு உட்பட நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான வியூசு ஒத்துழைப்பை இவ்வாண்டு கொண்டாட்டம் நிரூபித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Datuk Seri Dr Wan Azizah menegaskan peranan penting ibu dalam membentuk keluarga dan negara. Beliau menyeru agar penghargaan kepada ibu diberikan setiap hari, bukan hanya pada hari tertentu, kerana pengorbanan mereka sangat besar dan berterusan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *