இந்திய மாணவர்களின் கல்விக்கு மட்டுமல்ல; விளையாட்டுதுறையிலும் தமிழ்ச்சங்கம் கவனம் செலுத்த வேண்டும்! - ஓம்ஸ் பா.தியாகராஜன் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

கிள்ளான், ஆகஸ்ட் 13: சிலாங்கூர்  தமிழ்ச் சங்கத்தின் 11வது ஆண்டுக் கூட்டம், கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், 'ஜெம்' உணவகத்தில், மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

ஆலோசகர் க.ஆறுமுகம், சிலாங்கூர்  மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் க.முருகன் உட்பட சங்க உறுப்பினர்கள் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.

தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்விக்கு மட்டும் பாடுபடாமல், விளையாட்டுத் துறையிலும் நம் பிள்ளைகள் சிறந்து விளங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஓம்ஸ் பா.தியாகராஜன்  கேட்டுக் கொண்டார். தாமும் இதற்கு முன் நின்று உதவுவதாக அவர் உறுதியளித்தார்.

தமிழ்ப் பாடம் மட்டும் அல்லாமல், ஆங்கிலம், கணிதம், அறிவியல் போன்றவற்றிலும், விளையாட்டிலும் நம் இந்திய மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், தமிழ்ச் சங்கமும் இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்வாண்டுக்கூட்டத்தில்
சேகரன் லாடசாமி தலைவராகவும், துணைத் தலைவராக டத்தோ டாக்டர் சிவகுமார் சின்னசாமியும், செயலாளராக நாகராஜா சின்னையாவும், துணைச் செயலாளராக எம். ஜெயசந்திரன் முத்துவும்,  பொருளாளராக மணிவண்ணன் கோபால கிருஷ்ணனும் தேர்வு செய்யப்பட்டனர்.

​மேலும், சுப்பையா ராமநாதன் @ சேது, சந்துரு ஜோய் மாணிக்கம், சிங்கரவேலு ராமசாமி செல்லம், நாகராஜா  மல்லையா,
நந்தகுமார்  நகுரன் ஆகியோர் உறுப்பினர்களாகவும், திருமதி கவிதா மற்றும் வடிவேலன் உட்கணக்காய்வாளர்களாவும் தேர்வுசெய்யப்பட்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *