மோட்டார் சைக்கிள் விபத்துகள் வருத்தமளிக்கிறது! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக 7:  நாட்டில் மோட்டார் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

சட்ட அமலாக்கத்தில் காணப்படும் பலவீனம் மற்றும் சாலை பராமரிப்பு பிரச்சினை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பான சமூக கூட்டமைப்பின் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தையும் கவலையை வெளிப்படுத்தியதாக பிரதமர் தனது  முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நமரியாதை நிமித்தமாக தம்மைச் சந்தித்த லீ லாம் தை, சாலை பாதுகாப்பு மற்றும் வேலையிட பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைப் பேசியதாக அன்வார் தெரிவித்துள்ளார்.

எனவே, அமைப்புகளும் இதர அரசு சாரா இயக்கங்களும் நிலையான பாதுகாப்பை உறுதி செய்வதில தொடர்ச்சியாக சேவைகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், மலேசியா மடானி கோட்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் பங்களிப்பாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

லீ தலைமையில் இயங்கும் இந்த அரசு சாரா அமைப்பு சமூகத்தில் பாதுகாப்பு நிலையை உருவாக்குவதிலும், தகுதியான வேலையிட சூழலை உருவாக்குவதிலும் தொடர்ந்து மிகப்பெரிய சேவையைச் செய்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *