நஜிப்புக்கு வீட்டுக் காவல்: அரச உத்தரவு இருப்பதை உறுதிப்படுத்தியது ஏஜிசி!

top-news
FREE WEBSITE AD

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தமது எஞ்சிய சிறைக்காலத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் பேரரசர் ஒருவர் உத்தரவு பிறப்பித்தது உண்மை என்பதை சட்டத்துறைத் தலைவரின் அலுவலகம் (ஏஜிசி) நேற்று முதல் தடவையாக ஒப்புக் கொண்டது.

நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்க கீழ்நிலை நீதிமன்றமொன்று அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து ஏஜிசி அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த முறையீடு மீதான வழக்கு விசாரணை நேற்று கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது அந்த முன்னாள் பிரதமருக்கு வீட்டுக் காவல் வழங்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து ஏஜிசியின் நிலை என்ன என்பதை உறுதிப்படுத்தும்படி மூத்த கூட்டரசு வழக்கறிஞர் ஷம்சுல் போல்ஹசானை மலாயாத் தலைமை நீதிபதி டான்ஸ்ரீ ஹஸ்னா முகமது ஹஷிம் முன்னதாகக் கேட்டுக் கொண்டார்.

அதற்குப் பதிலளித்த ஷம்சுல், அத்தகைய அரச ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார். முன்னதாக வாதிட்ட நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமது ஷாபி அப்துல்லா, நஜிப்பை வீட்டுக் காவலில் வைக்கக்கோரும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் விஷயத்தில் ஏஜிசி வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொண்டிருக்க வேண்டும். அதனை மூடிவைத்திருக்கத் தேவையில்லை என்று வாதிட்டார்.

அரச உத்தரவு இருப்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால், உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து அதனை நிரூபிக்கும்படி இதுவரை வலியுறுத்தி வந்தனர் என்று ஷாபி கூறினார்.எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்கில் நஜிப்புக்கு கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவரின் தண்டனையை கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பாதியாகக் குறைத்தது. அவ்வேளையில், தம்முடைய எஞ்சிய சிறைவாசத்தை வீட்டிலேயே கழிப்பதற்கு அப்போதைய பேரரசர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை அரசாங்கம் இதுகாறும் மறுத்து வந்தது.

Pejabat Peguam Negara (AGC) pertama kali mengesahkan benar bekas Yang di-Pertuan Agong mengarahkan bekas Perdana Menteri Najib Razak menjalani baki hukuman penjara secara tahanan rumah. AGC memfailkan rayuan terhadap keputusan mahkamah rendah yang membenarkan Najib dikenakan tahanan rumah.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *