தென்னாப்பிரிக்காவின் 'டிக்டாக்' பிரபலமான பியென்றி பூசேன் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

தென்னாப்பிரிக்காவின் 'டிக்டாக்' பிரபலமான பியென்றி பூசேன் (Beandri Booysen) ப்ரோஜீரியா (progeria ) என்ற வயது மூப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.அதாவது, ஒவ்வொரு ஆண்டும் இவருக்கு எட்டு வயது அதிகமாகிக் கொண்டே செல்லும். பியென்றி பூசேன் (Beandri Booysen) டிக்டாக் பிரபலமாக மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்காவில் ப்ரோஜீரியா(progeria ) பாதித்த கடைசி நபராகவும் அறியப்பட்டார்.

இந்த நோய் மூலம் அவர் பல சவால்களை எதிர்கொண்ட நிலையில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியையும் மட்டுமே வெளிப்படுத்தினார். மேலும், ப்ரோஜீரியா (progeria ) நோய் குறித்த விழிப்புணர்வு அடையாளமாகவும் மாறினார். இந்நிலையில், ப்ரோஜீரியா (progeria ) நோயால் பாதிக்கப்பட்ட 19 வயதான பியென்றி பூசேன் (Beandri Booysen) உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பியென்றி பூசேன் (Beandri Booysen) இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். தனது விடுமுறையை பெற்றோர்களுடன் செலவிட ஆர்வமாக இருந்ததாக நியூயார்க் போஸ்ட் அறிக்கை தெரிவித்துள்ளது. டிக்டாக்கில் பியென்றி பூசேனை (Beandri Booysen) 269,200 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹட்சின்சன்-கில்ஃபோர்ட் ப்ரோஜீரியா நோய் (Hutchinson-Gilford progeria syndrome) என்பது ஒரு அறிய மரபணு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளமையிலேயே வயது மூப்பு அடைவார்கள். உலகளவில் ப்ரோஜீரியாவுடன் வாழும் 200 பேரில் பியென்றி பூசேனும் ஒருவராக இருந்தார். தென்னாப்பிரிக்காவில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட கடைசி நபர் இவர்தான்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *