வடகொரியாவின் மனித கழிவுக்கு, தென்கொரியாவின் தரமான பதிலடி!

top-news
FREE WEBSITE AD

தென் கொரியா ஒலிபெருக்கியில் தொடர்ந்து பரப்புரைகளை ஒலிபரப்புவதும்,  துண்டுப் பிரசுரங்களை வடகொரியாவில் வீசுவதும் தொடர்ந்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என Kim Yo Jong எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஞாயிற்றுக்கிழமை முதல் வடகொரிய மக்களை இலக்கு வைத்து தென் கொரியா ஒலிபெருக்கி பரப்புரையை தொடங்கியுள்ளது. வடகொரியாவில் இருந்து 700-க்கும் மேற்பட்ட பலூன்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை தென் கொரியாவுக்கு அனுப்பப்பட்ட நிலையிலேயே அந்த நாடு ஒலிபெருக்கி பரப்புரை மற்றும் துண்டுப் பிரசுரங்களை வீசுவதும் என பதிலடி கொடுத்துள்ளது. 

இந்நிலையில், இது மிகவும் ஆபத்தான நிலை என்று Kim Yo Jong தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

வடகொரியாவை சீண்டும் வகையில் தென் கொரியா இதற்கும் முன்னரும் பல முறை ஒலிபெருக்கி பரப்புரைகளை முன்னெடுத்துள்ளது. 

ஆனால் 2018ல் இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்த பின்னர் தென் கொரியா நிறுத்திக் கொண்டது. ஆனால் போருக்கான ஆயுதங்களை வடகொரியா உருவாக்கத் தொடங்கிய பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான உரசல் அதிகரித்தது. 

பொதுவாக தென் கொரியாவின் இந்த ஒலிபெருக்கி பரப்புரையானது, உலகச் செய்திகள், ஜனநாயக முறையால் ஏற்படும் நன்மைகள் என பல்வேறு சமூக மேம்பாடு தொடர்பான கருத்துகளும், தென் கொரியாவில் பிரபலமாக உள்ள K-pop இசையும் கலந்து ஒலிபரப்பப்படும். 

வடகொரியாவில் 20 கிலோமீட்டர் தொலைவில் மக்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாக பரப்புரைகளை தொடர்ந்து ஒலிபரப்பி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *