ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவீர் - பகாங் சுல்தான்!

top-news
FREE WEBSITE AD

குவாந்தான். ஏப். 19

பகாங் மாநிலத்தின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படும் விவகாரம் நிரந்தரமான முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று, மாநில ஆட்சியாளர் அல்-கல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மாட் ஷா சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புகளை கேட்டுக் கொண்டுள்ளார். போதைப் பொருள் மற்றும் குற்றவாளிகளைத் தவிர்த்து, மாநிலத்தின் முக்கிய பொது எதிரிகளில் ஒன்றாக, நில ஆக்கிரமிப்புகள் மிகவும் பரவலாகி விட்டதாகவும் பகாங் சுல்தான் தெரிவித்தார்.




மாநில அரசாங்கத்திற்குச் சொந்தமான 14,495 ஹெக்டர் நிலப்பரப்பில், செம்பனை மரங்கள், ரப்பர் மரங்கள் மற்றும் டுரியான் பழ மரங்கள் சட்டவிரோதமாக நடப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.விவசாயப் பெயரில் இருக்க வேண்டிய நிரந்தர வனப் பாதுகாப்பு நிலத்தில் 5,557 ஹெக்டர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

"உண்மையில் பார்க்கப் போனால், இது அரசு சொத்துகளை திருடுவதாகும். இந்த சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு விவகாரம் நிரந்தரமான முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று, குவாந்தானில் நேற்று வெள்ளிக்கிழமை பகாங் மாநில சட்டசபைக் கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றும்போது அல்-சுல்தான் அப்துல்லா தெரிவித்தார். இந்த நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் லஞ்ச ஊழல், அதிகார துஷ்பிரயோகம் அல்லது நம்பிக்கை மோசடி தொடர்பில் சாத்தியமான கூறுகள் இடம் பெற்றிருக்கக் கூடியது குறித்து அதிகாரத் தரப்பினர் அவசியம் ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ரவூப்பில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அங்கு நடப்பட்டுள்ள டுரியான் மரங்களை வெட்டி சாய்த்தது. அதன் தொடர்பில் கைது செய்யப்பட்டிருப்பது மற்றும் சட்டவிரோத சுரங்கங்களை மூடியது ஆகியவை மீது "கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக மாநில அதிகாரத் தரப்பினருக்கு அல்-சுல்தான் அப்துல்லா தமது பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தைப் விண்ணப்பத்திற்கும் மாநில ஆட்சிக் குழுவிடமிருந்து புதிய அங்கீகாரம் வழங்கப்படக் கூடாது என்று நான் சட்டவிரோத ரவூப் டுரியான் மரத் தோப்பு விவகாரம் தொடர்பில் போலீசார், அரசாங்க அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்ததற்காக, ரவூப் நாடாளுமன்ற உறுப்பினர் சௌ யு ஹூய் மற்றும் சேவ் மூசாங் கிங் குழுத் தலைவர் வில்சன் சாங் ஆகியோரை அண்மையில் கைது செய்திருந்தனர்.எனினும், அவர்கள் இருவரும் மறுநாள் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Sultan Pahang menitahkan supaya isu pencerobohan tanah negeri diselesaikan secara muktamad. Sebanyak 14,495 hektar tanah kerajaan dan 5,557 hektar tanah simpanan kekal telah diceroboh. Baginda mahu siasatan telus termasuk unsur rasuah dijalankan dan tidak kompromi terhadap penceroboh.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *