இனி கட்டுப்பாடுகள் அவசியம்! - பிரதமர்

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜூலை 30: கெடுதலை விளைவிக்கக் கூடிய தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவே சமூக ஊடகங்களுக்கும், இணையத் தகவல் சேவைகளுக்கும் அரசாங்கம் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார்.

இணையப்‌ பகடிவதையால்‌ டிக்‌ டாக்‌ பிரபலம்‌ ஏ.ராஜேஸ்வரி என்ற இளம்பெண்‌ தன்னுடைய உயிரைப்‌ போக்கிக்‌ கொண்டிருப்பதாலும்,‌ இந்தக் கட்டுப்பாடுகளுக்கு அவசியம்‌ ஏற்பட்டுள்ளது என்று ஈப்போவில்‌ நிகழ்ச்சி ஒன்றில்‌ உரையாற்றியபோது அவர்‌ குறிப்பிட்டார்‌. 

இருபத்தொன்பது வயதான ராஜேஸ்வரி, இம்மாதம்‌ 5ஆம்‌ தேதியன்று கோலாலம்பூர்‌, ஸ்தாப்பாக்கில்‌ உள்ள தம்முடைய இல்லத்தில்‌ இறந்து கிடக்கக்‌ காணப்பட்டார்‌. டிக்டாக்‌ செயலி மூலம்‌ இரண்டு நபர்கள்‌ தம்மைத்‌ தொல்லைப்படுத்துவதாகக்‌ கூறி ஒரு நாளுக்கு முன்பு போலீசில்‌ புகார்‌ செய்திருந்தார்‌. ஈஷா என அறியப்படுபவரான ராஜேஸ்வரி இந்துசமய இயக்கவாதி ஆவார்‌. 

இத்தகைய கொடுஞ்செயல்கள்‌ நடைபெறாமல்‌ இருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம்‌ சில கட்டுப்பாடுகளை அறிமுகம்‌ செய்து வருகிறது. இத்தகைய கட்டுப்பாடுகளை மக்களில்‌ ஒரு தரப்பினர்‌ விரும்பாமல்கூட இருக்கலாம்‌. ஆனால்‌ கருத்துச்‌ சுதந்திரம்‌ எனும்‌ பெயரில்‌ சிலர்‌ தங்களின்‌ மனப்போக்கில்‌ செயல்படுகின்றனர்‌. எந்தவிதமான கருத்துகளையும்‌ வெளியிடத்‌ தங்களுக்கு உரிமை உள்ளதாக அவர்கள்‌ கூறிக்கொள்கின்றனர்‌. சமூகத்திற்கு எத்தகைய தாக்கத்தை அது ஏற்படுத்தும்‌ என்பதை அவர்கள்‌ பொருட்படுத்துவதில்லை. இதுபோன்ற அலைக்கழிப்பினால்‌ பெண்கள்‌ தற்கொலை செய்துகொள்ள நேர்ந்தாலும்‌, அது குறித்து அவர்கள்‌ கவலை கொள்வது கிடையாது. அத்தகைய செயல்களை ஒரு முடிவுக்குக்‌ கொண்டுவர இத்தகைய கட்டுப்பாடுகள்‌ அவசியம்‌ என்று ஈப்போவில்‌ ஏழாவது உலக இஸ்லாமிய சிந்தனை மற்றும்‌ நாகரிகம்‌ மீதான மாநாட்டைத்‌ தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அன்வார் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மொத்தம் 80 லட்சம் பேர் பயன்படுத்தி வரும் அனைத்து சமூக ஊடகங்களும், இணைய தகவல் சேவை தளங்களும் லைசென்ஸுக்காக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி கடந்த சனிக்கிழமை அறிவித்திருந்தது whatsapp youtube, facebook , instagram, tiktok,telegram, vchat,  snapchat, line போன்றவை அதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து லைசென்ஸ் நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் எம்சிஎம்சி குறிப்பிட்டிருந்தது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *