அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

- Muthu Kumar
- 15 Apr, 2025
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ (San Diego) நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்கள் கடும் பீதியில் உரைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே உலகின் பல பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மியான்மர் மற்றும் தாய்லாந்தை தொடர்ந்து ஏப்ரல் 13, 2025 அன்று இந்தியாவின் இமாச்சல பிரதேசத்திலும் மற்றும் தஜிகிஸ்தான் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, நிலநடுக்கம் காரணமாக ஏற்கனவே கடும் பாதிப்புகளை சந்தித்து இருந்த மியான்மரிலும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கங்கள் குறைவான அளவில் பதிவு செய்யப்பட்ட நிலையில் எந்த விதசேதமும் பதிவு செய்யப்படவில்லை.
இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு 5.2 ரிக்டராக பதிவு செய்யப்பட்ட நிலையில், சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சான் டியாகோ நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் குறைவாக வசிக்கும் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், எந்த வித பெரிய சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 7.7 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கம் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு உயிர் பலி எண்ணிக்கை சுமார் 3,000 கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *