ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு உண்டு! த.வெ.க தலைவர் விஜயின் பலே திட்டம்!
- Muthu Kumar
- 28 Oct, 2024
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு மிகப் பிரமாண்டமாக ஆரம்பித்த நிலையில் மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் விஜய் அவருடைய கொள்கைகளையு,ம் கட்சியின் திட்டங்களையும் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கிறார்.
அந்த வகையில் பெண்களின் பாதுகாப்பு, சமமான கல்வி மற்றும் மருத்துவம், அத்தியாவசியமான குடிநீர் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதை பற்றி பேசி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து மிக முக்கியமாகவும் ஆணித்தரமாகவும் விஜய் எடுத்து வைத்த ஹைலைட் விஷயங்கள் என்னவென்றால், நம்மளை தேடி வருவோர்களுக்கு நம் கட்சியின் ஆதரவு எப்பொழுதுமே அவர்களுக்கு கிடைக்கும். அன்புடன் வரவேற்கும் அதே மாதிரி எங்க கூட கூட்டணி சேருவோர்களுக்கு ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு உண்டு எனவும் தெள்ளத்தெளிவான பதிலை கொடுத்திருக்கிறார்.
இவர் இப்படி கூறியது மறைமுகமாக இரண்டு தலைவர்கள் கூட்டணி வைப்பது போல் தெரிகிறது. அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன் கொள்கைப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும் எந்தவித ஏற்றத்தாழ்வு பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இதை ஒரு கொள்கையாக விஜய்யும் கடைபிடிப்பது போல் கூறியிருக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவருடைய கொள்கையும் ஒத்துப் போகிறது.
அடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசுவது போல விஜயின் பேச்சும் ஒத்துப் போயிருக்கிறது. அதாவது ஊழல் இல்லாத ஒரு தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்றுதான் சீமான் போராடி வருகிறார். அதே மாதிரி விஜயும் கூறியது ஊழல் இல்லாத தமிழக அரசை கொண்டுவர வேண்டும் அதுவே எங்களுடைய கொள்கையின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் என்று குரல் கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் இந்த இரண்டு கட்சிகளுக்குமே எப்பொழுதுமே தமிழக வெற்றிக் கழகத்தில் இடம் உண்டு என்பதற்கு ஏற்ப விஜய் கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார். இனி அடுத்தடுத்து என்ன மாற்றங்கள் நடக்கப் போகிறது என்பதையும் விஜய் மற்றும் உதயநிதி இவர்களிடையே போட்டிகள் தொடர்ந்து வருவதால் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு வெற்றி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *