டவர் ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டரை பிடித்துவிட்டது- எலான் மஸ்க்!

top-news
FREE WEBSITE AD

விண்வெளி ஆய்வில் மிகப்பெரும் சாதனையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ், தனது ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஹெவி பூஸ்டரை மீண்டும் ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பச் செய்து ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போகோசிகாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ஏவுதளத்தில் இருந்து அக்டோபர் 13 ஆம் தேதி அமெரிக்க நேரப்படி காலை 8.25 மணியளவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது 400 அடி உயர ஐந்தாவது ஸ்டார்ஷிப் விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.

விண்ணில் ஏவப்பட்ட 7 நிமிடங்களில் விண்கலத்தில் இருந்த சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட் திட்டமிட்டபடி மீண்டும் ஏவுதளத்திற்கே திரும்பியது. இதற்கு முன்பு ஏவப்பட்ட பூஸ்டர் திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பவில்லை. இந்தச் சூழலில் மிக துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மீண்டும் ஏவுதளத்துக்கு திரும்பி வந்தது 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்.

ஏவப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்த ஹெவி பூஸ்டர் ராக்கெட்டை "மெக்காஸில்லா" எனப்படும் மிகப்பெரிய லான்ச்பேட், தனது 'சாப்ஸ்டிக்ஸ்' எனப்படும் பிரம்மாண்ட கைகளால் பிடித்தது. இது தொடர்பான காணொளி வெளியிடப்பட்ட நிலையில் உலகமே வியந்து பார்த்தது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது ராக்கெட் சோதனையில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட்டானது புவி ஈர்ப்பு விசையை மீறி ஏவுதளத்திற்கு மீண்டும் வந்திறங்கி அதிசயிக்க வைத்தது. இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை.

"நண்பர்களே, இது பொறியியல் வரலாற்றில் முக்கியமான நாள்" என்று ஸ்பேஸ்எக்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். "டவர் ஸ்டார்ஷிப் ராக்கெட் பூஸ்டரை பிடித்துவிட்டது!" என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இது விண்வெளி ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்று பலரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *