அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் நவீன் பலி!

- Muthu Kumar
- 14 Jan, 2025
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழகத்தில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கி வருகின்றனர்.
இன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் டிராக்டரும், துணை முதல்வர் சார்பில் காரும் பரிசாக அளிக்கப்பட இருக்கிறது. தற்பொழுது 9 சுற்றுகள் முடிந்து 10வது சுற்று தொடங்கியிருக்கும் நிலையில் இதுவரை மொத்தம் 41 பேர் இதுவரை ஜல்லிக்கட்டில் காயம் அடைந்துள்ளனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், விளாங்குடியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நவீன்குமார் என்பவர் களமாடும்போது படுகாயமடைந்தார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நவீன் குமார், தற்போது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *