மாநாட்டைப் புறக்கணிப்பது ரபிஸியின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கச் செய்து விடும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 21-

பிகேஆர் கட்சியின் பொதுப் பேரவையை நடைபெற விருக்கும் பிகேஆர் கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் பிரிவுக் கூட்டங்களை தொடக்கி வைக்க மறுத்திருக்கும், அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியின் முடிவு அவரின் அரசியல் எதிர்காலத்தை பாதிக்கச் செய்து விடக் கூடும்.

அதோடு, ரபிஸியின் இத்தகைய முடிவு "சிறுபிள்ளைத் தனமானது என்று. மலாயா பல்கலைக் கழகத்தின் தௌஃபிக் யாக்கோப் மற்றும் மலேசிய தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் மஸ்லான் அலி ஆகிய இரண்டு அரசியல் ஆய்வாளர்கள் வருணித்தும் இருக்கின்றனர்.

வழக்கமாக ஒரு கட்சியின் துணைத் தலைவரினால் அதன் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் மாநாடுகள் துவக்கி வைக்கப்படும். ஆனால், கட்சியின் அரசியல் கொள்கைகளை சுட்டிக் காட்டி, அம்மாநாடுகளை தாம் துவக்கி வைக்கப் போவதில்லை என்று ரபிஸி உறுதியாக கூறியுள்ளார்.

சபாவின் கோத்தாகினபாலுவில் கடந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அம்மாநிலத் தேர்தல் கேந்திர துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்காத மாநில பிகேஆரின் நெறிமுறையுடன்,ரபிஸியின் இந்த முடிவு சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. ரபிஸி ஒரு பெரிய நபராக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், "தாம் இன்னமும் கட்சியின் துணைத் தலைவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். ஆதலால், அவர் தமது கடமையை நிறைவேற்ற வேண்டியதும் அவசியம்" என்று தௌஃபிக் கூறினார். கட்சியின் இரண்டாவது தலைவர் எனும் முறையில், கட்சியின் அனைத்து உறுப்பினருடனும் ரபிஸி அனுசரித்து போகவேண்டும் என்று மஸ்லான் கருதுகிறார்.

"மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்ப்பதன் மூலம், அவர் ஒரு நட்பற்றவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இது தவறான வழிக்குச் செல்ல இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளின் உறுப்பினர்களுக்கு வழிவகுத்தும் விடும் என்று மஸ்லான் குறிப்பிட்டார். இந்நிலையில், ரபிஸி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார் என்று கூறப்படுவதை ஒப்புக் கொள்ளாத, தேசிய பேராசிரியர்கள் மன்ற உறுப்பினர் அஸ்மி ஹசான், அவர் "திணறிக் கொண்டிருக்கின்றார்” என்று தாம் நம்பவில்லை என்றார்.

கட்சியின் அவ்விரு மாநாடுகளின்போது, மேடையில் இருக்கும் சமயத்தில் கேலி செய்யப்படும் சம்பவம் ஏதாவது நிகழக் கூடிய சாத்தியத்தை தவிர்ப்பதற்காகவே ரபிஸி இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என்றும் அஸ்மி தெரிவித்தார்."இளைஞர் மற்றும் மகளிர் பிரிவுகளைச் சேர்ந்த பலர் அவரை ஆதரிக்கவில்லை" என்றும் கடந்த மாதத்தில் நடந்த தொகுதித் தேர்தல்களில் ரபிஸியின் ஆதரவாளர்கள் பலர் தோல்வியுற்றதன் விளைவாக அத்தகைய சம்பவம் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக அஸ்மி குறிப்பிட்டார்.

தம்மை எதிர்த்துப் போட்டியிடும் நூருல் இஸ்ஸா அன்வாரின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏற்கெனவே திட்டமிடப்பட்டு விட்டது என்று ரபிஸி கூறியிருப்பது குறித்தும் தௌபிக் கருத்து தெரிவித்துள்ளார். “கட்சியின் தேர்தல் முறை குறித்து ரபிஸி தவறான தகவலை வெளிப்படுத்துகிறார் என்ற தோற்றத்தையும் அவரின் இத்தகைய கருத்து ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.

Keengganan Timbalan Presiden PKR, Rafizi Ramli, merasmikan mesyuarat sayap wanita dan pemuda parti dikritik penganalisis sebagai tindakan kebudak-budakan yang boleh menjejaskan masa depannya. Tindakannya menimbulkan persepsi negatif dalam kalangan ahli parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *