பிகேஆர் கட்சித் தேர்தல்; நடப்பு உதவித் தலைவர்களில் மூவர் மீண்டும் வெற்றி!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, மே 25

பிகேஆர் கட்சியின் 4 உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட்ட அதன் 4 நடப்பு உதவித் தலைவர்களில் மூவர் தங்களின் பதவிகளை தற்காத்துக் கொண்டுள்ள வேளையில், ஒருவர் மட்டுமே தோல்வி அடைந்திருக்கின்றார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூண் மற்றும் மத்திய அமைச்சர் சாங் லி காங் ஆகியோரே அந்த மூவராவர். நடப்பு உதவித் தலைவராக இருந்த மத்திய அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் இத்தேர்தலில் தோல்வியுற்றார்.

நான்காவது உதவித் தலைவராக, சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ஆர். ரமணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்பதவிக்குப் போட்டியிட்ட இதர எண்மரை தோற்கடித்து இந்த நால்வரும் வெற்றி பெற்றுள்ளனர்.புதிய துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நூருல் இஸ்ஸா அன்வாரின் அணியின் கீழ் அமிருடினும் ரமணனும் போட்டியிட்டனர். இதில் அமிருடினுக்கு 7,955 வாக்குகளும் ரமணனுக்கு 5,985 வாக்குகளும் கிடைத்தன.

கட்சியில் முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியின் அணியின் கீழ் போட்டியிட்ட சாங்கிற்கு 5,757 வாக்குகளும் அமினுடினுக்கு 5,889 வாக்குகளும் கிடைத்தன.
இவர்களைத் தவிர்த்து, நிக் நஸ்மி நிக் அஹ்மாட், பாயான் பாரு எம்பி சிம் ஷி ஷின், சிகாமாட் எம்பி ஆர். யுனேஸ்வரன், செனட்டர் அபுன் சூய் அன்யிட், சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான், முன்னாள் உதவித் தலைவர் முஸ்தபா கமில் அயூப் மற்றும் முன்னாள் காப்பார் எம்பி கி. மணிவண்ணன் ஆகியோரும் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்களில் அடங்குவர்.

Tiga daripada empat penyandang Naib Presiden PKR berjaya mengekalkan jawatan dalam pemilihan parti, manakala Nik Nazmi tewas. R. Ramanan dipilih sebagai naib presiden baharu, mengalahkan lapan calon lain dalam persaingan sengit.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *