ஆண்மையோடு இடைத்தேர்தலை எதிர்நோக்குங்கள்! பாஸ் கட்சி சாடல்!

- Sangeetha K Loganathan
- 17 Apr, 2025
ஏப்ரல் 17,
Ayer Kuning சட்டமன்ற இடைத்தேர்தலில் பாரிசான் கட்சியும் பக்காத்தான் கட்சியும் இணைந்து போட்டியிடும் நிலையில் கொஞ்சமாவது நியாயமாகவும் ஆண்மைத்தனத்தோடும் தேர்தலை எதிர்நோக்கும்படி பாஸ் கட்சியின் உதவித் தலைவர் Datuk Idris Ahmad வலியுறுத்தினார். அரசு நிறுவனங்களில் மக்கள் நலத்திட்டங்களைத் தேர்தலின் போது வழங்குவது கீழ்த்தரமானச் செயல் என Datuk Idris Ahmad தெரிவித்தார். பெரிக்காத்தான் கூட்டணி ஆண்மையோடும் நியாயமாகவும் தேர்தலை எதிர்நோக்குவதாகவும் பாரிசான் கட்சி அரசாங்க நிறுவனங்களின் மூலமாகத் தேர்தலைச் சந்திப்பதாகவும் Datuk Idris Ahmad குற்றம் சாட்டினார்.
கடந்த காலங்களில் நடந்த தேர்தலைப் போல இப்போதும் பாரிசான் அரசாங்கப் பணத்தைப் பயன்படுத்தி Ayer Kuning மக்கள்களுக்குச் சிறப்பு சலுகைகளை வழங்குவதாகவும் காலம் காலமாக இந்த தவறானத் தேர்தல் முறையை எதிர்த்து வந்த PAKATAN HARAPAN இப்போது அமைதியாக இருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் Datuk Idris Ahmad தெரிவித்தார். பாரிசானிடமிருந்து நியாயத்தை எதிர்பார்ப்பது வீண் என்றாலும் பக்காத்தானும் இப்போது கூட்டு சேர்ந்து அரசாங்கப் பணத்தைத் தேர்தலில் செலவிடுவதாக Datuk Idris Ahmad சாடினார்.
Datuk Idris Ahmad dari PAS menggesa agar pilihan raya kecil Ayer Kuning dihadapi secara adil dan berani. Beliau mengecam Barisan dan Pakatan kerana didakwa menyalahgunakan agensi kerajaan dan dana awam untuk meraih sokongan pengundi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *