மாமன்னரை மதிக்காத நீதிமன்றம்! – பாஸ் கட்சி சாடல்!

top-news

ஏப்ரல் 29,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் வீட்டுக் காவல் குறித்தான முன்னாள் மாமன்னரின் அறிவுருத்தலுக்கு இணங்குவதில் நீதிமன்றத்திற்கு என்ன பிரச்சனை என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man கேள்வி எழுப்பியுள்ளார். நஜீப்பின் வீட்டுக் காவல் உத்தரவை ஏற்காமல் ஓராண்டுக்கும் மேலாக நீதிமன்றம் இழுத்தடிப்பதாகவும் Dato’ Sri Tuan Ibrahim Tuan Man குற்றம் சாட்டினார். 

நீதிமன்றத்தின் உரிமை, சட்டத்தின் வழி நடப்பதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஆனால் மாமன்னரின் தண்டனைக் குறைப்பையும் வீட்டுக் காவலையும் நீதிமன்றம் ஏற்பதில் தாமதிப்பதற்கு என்ன காரணம் என Dato’ Sri Tuan Ibrahim Tuan Man வினவினார். உண்மையில் இதைக் கேட்க வேண்டியது அம்னோக்காரர்கள் தான். ஆனால் நஜீப்பின் வீட்டுக்காவல் ஓராண்டுக்கும் மேலாகத் தாமதிக்கப்படுவது குறித்து அம்னோவிடமிருந்து எந்தவோர் அறிக்கையும் வரவில்லை என்றும் ஒரு வேளை நஜீப் சிறையில் இருக்க வேண்டுமென அம்னோ விரும்புகிறது போல என Dato’ Sri Tuan Ibrahim Tuan Man தெரிவித்தார்.

Timbalan Presiden PAS mempersoalkan kelewatan mahkamah menerima titah pengurangan hukuman dan arahan tahanan rumah terhadap Najib, menyatakan bahawa kelewatan lebih setahun menunjukkan ketidakpatuhan terhadap pandangan bekas Yang di-Pertuan Agong.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *