பாரிசானை விட பாஸ் கட்சி இந்தியர்களை அங்கீகரிக்கிறது! - PUNITHAN சாடல்!

top-news

ஏப்ரல் 30,

இந்தியர்களைப் பாஸ் கட்சி அங்கீகரிக்காது என அம்னோ உச்சமன்ற உறுப்பினர் Puad Zarkashi தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருப்பதாகவும் அம்னோ எந்த காலத்தில் இந்தியர்களை அங்கீகரித்துள்ளது எனும் கேள்வியையும் பெரிக்காத்தானில் இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் கட்சியான MIPP கட்சியின் தலைவர் Punithan Paramsiven கேள்வி எழுப்பினார். 

பாரிசானில் ம.இ.கா, ம.சீ.ச கட்சிகளைப் பொம்மையாக வைத்திருக்கும் அம்னோ ஒரு போதும் இந்தியர்களையும் சீனர்களை அங்கீகரித்ததில்லை என புனிதன் தெரிவித்தார். பாஸ் கட்சியில் இந்தியர் நலப்பிரிவு எனும் ஒரு பிரிவைக் கொண்டிருப்பதாகவும் பெரிக்காத்தான் ஆளும் மாநில அரசில் முதலமைச்சரின் நேரடி பார்வையில் சிறப்பு அதிகாரியாக இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதையும் புனிதன் சுட்டிக்காட்டினார். கடந்த பொதுத்தேர்தலில் இந்தியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் பாரிசானும் நிறைவேற்றவில்லை, பக்காத்தானும் நிறைவேற்றவில்லை என MIPP கட்சியின் தலைவர் Punithan Paramsiven தெரிவித்தார்.

Ketua MIPP, Punithan Paramsiven, menyelar kenyataan UMNO bahawa PAS tidak mengiktiraf kaum India, menyatakan UMNO sendiri gagal mengiktiraf kaum India dan Cina. Beliau menegaskan PAS lebih inklusif melalui pelantikan wakil khas untuk kaum India

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *